பெங்களூரு, ஜூன் 8 ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பெங்களூருவில் மேனாள் பிரதமரும் ம.ஜ.த. தேசியத் தலைவருமான தேவ கவுடாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது மேனாள் முதலமைச்சர் குமாரசாமி, காங் கிரஸ் மேனாள் அமைச்சர் ரோஷன் பெய்க் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் தேவ கவுடா கூறியதாவது: கருநாடகாவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கு எதிராக ம.ஜ.த. போராடி வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது கூட இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தோம். ஆனால் மக்களவைத் தேர்தலில் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அது முற்றிலும் தவறான செய்தி. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இந்தியாவில் உள்ள பெரும் பாலான கட்சிகள் பாஜகவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டணி வைத்துள்ளன. மக்களவைத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுப்போம். எங்க ளுக்கு வரும் கூட்டணி அழைப் புகளை புறந்தள்ள மாட்டோம். ஃபரூக் அப்துல்லா உடன் காஷ்மீர் அரசியல் குறித்தே பேசினேன்.
இவ்வாறு தேவகவுடா தெரிவித்தார்
No comments:
Post a Comment