கவிச்சுடர் கவிதைப் பித்தன்
தொண்ணூறு வயதில் " எண்ப தாண்டுகள்"
தொடரும் அரிய பொதுவாழ்வு!
துளியும் இல்லை மனச்சோர்வு!
கண்ணாரக் காணும் பொலிவும் வலிவும்
கலந்து மிளிரும் எழிலோடு
களமா டுகிறார் துணிவோடு!
அண்ணல் எங்கள் திராவிடத் தந்தை
அய்யா பெரியார் தினவோடு.. இன்னும்
ஆயிரம் பிறைகள் கண்டு வாழ்கவே
"ஆசிரி யர்"உயர் புகழோடு!
ஈரைந்து வயதினிலே மேடை ஏறினார்!
இளங்குருளை! தமிழ்ப்பகையைக் கண்டு சீறினார்!
போராடி அடக்குமுறைத் தடைகள் மீறினார்!
புவிபோற்றும் பெரியாராய் இன்று மாறினார்!
"அனைவருக்கும் அனைத்தும்"எனச் சூளு ரைப்பவர்!
ஆதிக்க ஆரியத்தின் வேர றுப்பவர்!
முனைமுகத்தில் இனஉரிமைப் போர்தொ டுப்பவர்!
முதல்வர்எங்கள் " தளபதி"க்குத் தோள்கொ டுப்பவர்!
சீற்றமிகு சினவேங்கை குணம்வி ளங்குமே!
செந்தமிழர் வாழ்வுயரச் செயல்து லங்குமே!
வேற்றுமுகாம் மாற்றுமுகாம் நிலைஒ டுங்குமே!
"வீரமணி" எனில், பகைவர் குலைந டுங்குமே!
ஒருவர்எங்கள் "ஆசிரியர்" உழைப்பு, தியாகத்தில்!
உவமைசொல்ல எவருமில்லை மனித நேயத்தில்!
வருவர்இவர் போற்சிலரே இந்த ஞாலத்தில்!
வாழ்வதுநம் பெருமை, இவர் வாழும் காலத்தில்!
தொண்ணூறு வயதில் " எண்ப தாண்டுகள்"
தொடரும் அரிய பொதுவாழ்வு!
துளியும் இல்லை மனச்சோர்வு!
கண்ணாரக் காணும் பொலிவும் வலிவும்
கலந்து மிளிரும் எழிலோடு
களமா டுகிறார் துணிவோடு!
அண்ணல் எங்கள் திராவிடத் தந்தை
அய்யா பெரியார் தினவோடு.. இன்னும்
ஆயிரம் பிறைகள் கண்டு வாழ்கவே
"ஆசிரி யர்"உயர் புகழோடு!
No comments:
Post a Comment