சர்க்கரை சேர்க்காமல் பால் அருந்துங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

சர்க்கரை சேர்க்காமல் பால் அருந்துங்கள்

சூப்பர் மார்க்கெட்டில் மாதாந்திர மளிகை சாமான் வாங்க கூடும் மக்கள் தற்போதெல்லாம் வெள்ளை சர்க்கரையை விடுத்து, நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி என்று வாங்குகிறார்கள். போதாக் குறைக்கு கருப்பட்டி டீ என சாதா டீயை விட 5 ரூபாய் அதிகம் நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் தேநீரை அதிக நபர்கள் குடிக்கிறார்கள்!!

இந்த பதிவு இந்த சர்க்கரை வகைகளை மய்யப் படுத்தியே. எது நல்லது?

சர்க்கரையா? நாட்டு சர்க்க ரையா? கருப்பட்டியா?

சர்க்கரை மற்றும் நாட்டு சர்க் கரை ஆகிய இரண்டும் கரும்பை கொண்டு உற்பத்தி செய்யப்படு கின்றன. நாட்டு சர்க்கரையை பாலிஷ் செய்வதன் மூலம் வருவதே வெள்ளை சர்க்கரை.

ஆனால், நினைவில் கொள்க. இவை இரண்டில் இருப்பதும்  

'Sucrose' என்னும் சர்க்கரையே. பாலிஷ் செய்யப்படவில்லை என்ற காரணத்தால் நாட்டு சர்க்கரை சுகரை குறைக்கும் என்ற ஆய்வுகள் இல்லை.

Glycemic Index  என்ற ஒரு வார்த்தை உள்ளது. அதாவது, நாம் உண்ணும் உணவு எவ்வளவு வேக மாக நம் உடலில் சர்க்கரையாக மாறுகிறது என்று.

இதை ஒரு எடுத்துக்காட்டு கொண்டு கூறினால் இன்னும் தெளிவாக புரியும்.

TVS50  பைக் மற்றும் Pulsar பைக்கை எடுத்துக்கொள்ளுங்கள்.

இரண்டிலும் பெட்ரோல் தான். 1 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும். உங்களால் பல்சர் பைக்கில் சீக்கிரம் செல்ல முடியும். ஆனால், TVS50 50இல் செல்ல அதை விட அதிக நேரமாகும்.

இதை பல்சருக்கு அதிக Glycemic Index   உள்ளது.

TVS50 க்கு குறைவான Glycemic Index   உள்ளது என கொள்ளலாம்.

நாம் உண்ணும் உணவு அதிக Glycemic Index கொண்டதாக இருந்தால் அது தவறு. ஏனென்றால் அது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். நமக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்பை உண்டாக்கும்.

இப்படியாக - வெள்ளை சர்க் கரை, நாட்டு சர்க்கரை, கருப்பட்டி என எதை எடுத்துக்கொண்டாலும் அவை  High Glycemic Index  கொண் டவை தான். ஓரளவு மாறுபாடு உள்ளதே தவிர அவை லிஷீஷ் நிறீஹ்நீமீனீவீநீ மிஸீபீமீஜ்  கொண்டது அல்ல.

மருத்துவர்கள் பலரும் மாவுச் சத்தை குறைத்து உண்ண சொல் கிறோம். நீரிழிவு நோயாளிகள் சர்க் கரையை அறவே தொடக் கூடாது என கூறுகிறோம். ஆனால், காய் கறிகளை உண்ணலாம் என கூறுகி றோம். காய்கறியில் கூட மாவுச்சத்து உள் ளது. ஆனால், உண்ணலாம் என கூறுகிறோம்?  ஏன்?  காரணம்  காய்கறிகள் Low Glycemic வகை உணவுகள். மேலும், காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து (fibre)அவ்வளவு எளிதாக சர்க்கரை அளவை உயர்த்தாது.

ஆகவே, சர்க்கரையை எந்த விதத்தில் உண்டாலும் தீங்கு தான்.

மேலும், நமது உடலுக்கு கால்சியம் என்னும் சத்து தேவை. இதை நாம் தினமும் குடிக்கும் பால் மூலம் அடைகிறோம். ஆனால், பாலில் சர்க்கரையை சேர்த்து உண் பதால் கால்சியம் உடலுக்கு சேராது. வீணாகும். இதை Malabsorption   என்கிறோம்.

பாலில் உள்ள Lactose  என்னும் சர்க்கரையே ஓரளவு இனிப்பை தரும். நாம் அதிக சர்க்கரை குடித்து பழகியதால், நமது நாக்கு அந்த சுவைக்கு அடிமையாகி விட்டது. நீங்கள் சர்க்கரையை விடுத்து தேநீர், காபி குடித்தால் சில நாட்களுக்கு கசக்கும். அதன்பின்பு, நமது நாக்கு பாலின் இயல்பு சுவைக்கு பழகிக் கொண்டு கசப்பை காண்பிக்காது.

நான் கூறுவதை எந்த உடல் உபாதையும் அல்லாதவர்கள் கேட் காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், நீரிழிவு/ரத்த அழுத்தம் முதலிய உபாதை கொண்ட பெரிய வர்கள் கருத்தில் கொள்ளவும். நாட்டு சர்க்கரை பாலிஷ் செய்யப் படவில்லை என்ற காரணத்தால் அது சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் என்பது மாயை. சர்க்கரை சேர்க்காமல் பால் குடிக்க பழகுங்கள்.

- டாக்டர் அரவிந்த்ராஜ்


No comments:

Post a Comment