மணிப்பூர் குறித்து அக்கறை இருந்தால், அம்மாநில முதலமைச்சரை நீக்குங்கள் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

மணிப்பூர் குறித்து அக்கறை இருந்தால், அம்மாநில முதலமைச்சரை நீக்குங்கள் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை

புதுடில்லி, ஜூன் 30 கடந்த மாதம் 3-ஆம் தேதி மணிப்பூரில் 'மெய்தி' பெரும் பான்மையின மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித் தது. 100-க்கும் மேற்பட்டோர் பலியா னார்கள். இன்னும் கலவரம் நீடித்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 

ஒருவழியாக, மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 55 நாட்களாக, மணிப்பூர் பற்றி மோடி ஒரு வார்த்தை கூட சொல் லவில்லை. அவர் பேசுவதை கேட்க ஒவ்வொரு இந்தியனும் காத்துக் கொண்டிருக்கிறான். மணிப்பூர் மீது பிரதமர் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், முதல் வேலையாக, மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங்கை அவர் நீக்க வேண்டும். 

மணிப்பூர் கலவர பிரச்சினையில், பா.ஜனதாவின் எத்தகைய பிரசாரமும் அதன் தோல்வியை மூடி மறைக்க முடியாது. பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளிடம் இருந்து திருடப் பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவான அரசியல் வழிமுறை காண வேண்டும். பாதுகாப்பு படையினரின் உதவியுடன் சாலை அடைப்பை நீக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை திறந்து, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். மறுவாழ்வுக்கான புதிய திட்டம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மணிப்பூரில் 12 பதுங்கு குழிகளை பாதுகாப்புப் படையினர் அழித்தனர். தமன்லாங், இம்பால் கிழக்கு, பிஷ்னுபூர், கங்க்போக்பி, காக் சிங், சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது அவை அழிக்கப்பட்டன. இந்த வேட்டையில், 51 எம்எம், 84 எம்எம் ரக பீரங்கி குண்டுகள் ஒரு நெல் வயலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட் டது. ஒரு வெடிகுண்டும் சிக்கியது. அவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். இதுவரை 1,100 ஆயுதங்கள், 13 ஆயிரத்து 702 வெடி பொருட்கள், 250 வெடிகுண்டுகள் ஆகி யவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறியதாக 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment