ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பொழுது போக்கிற்காக படிப்பவர்கள் மத்தியில் போக்குகின்ற பொழுதையே படிப்பதை வழக்கமாக கொண்டு, சமுதாய இழிவை துடைத்தெறிந்து, அனைத்து சமு தாய மக்களும் மானமும் அறிவும் பெற்று, அனைவ ருக்கும் அனைத்தும் என்ற நிலை எட்ட 90 வயது கடந்தும் வயதை தடையாக பார்க்காமல் பாடுபட்டு,
பல சமுதாய தடைகளை உடைத்தெறிந்து, ஆதிக்க சக்திகள் கோலோச்சிய காலத்திலும் தங்களின் மதி நுட்பத்தால் 69 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்து, தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை எவ்வித சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடிப்பதே எனது வேலை என்று எங்களை வழி நடத்தி செல்லும் தங்கள் அடிச்சுவட்டில் பாதை மாறாமல் நன்றியுடன் பயணிப்போம் அய்யா.
இருதய சிகிச்சை செய்து கொண்டு 11 ஆண்டு தொடர்ந்து லாரி ஓட்டுநராக இருந்து சுயமரியாதை யுடன் நான் இன்றுவரை வாழ்வது உங்கள் உழைப் பையும் தன்னம்பிக்கையும் பார்த்துத்தான் அய்யா.
ஓமலூர் பெ.சவுந்திரராசன்
நள்ளிரவிலும் புத்தகம் வாசித்த தமிழர் தலைவர்!
கடந்த 15-06-2023 அன்று திருப்பத்தூர் (வேலூர்) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு அன்றிரவு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் கோவையில் நடை பெற்ற தி.மு.க.தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடு இரவு 1 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சேரன் விரைவு ரயிலுக்காக நடைமேடையில் காத்திருந்தார் ஆசிரியர் அவர்கள்..
ஆனால் 1.45 மணிக்கு தான் ரயில் வரும் என்று அறிவிப்பு தரப்பட்டது. அதை கேட்ட தமிழர் தலைவர் புத்தகத்தை படிக்கத் தொடங் கினார். அவரின் வயது என்ன... 90. காலையில் இருந்து தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவும் கண் விழித்து அதுவும் நள்ளிரவிலும் புத்தகம் வாசிக்கும் தேனீயாய் திகழும் ஆசிரியர் அவர்களை எண்ணி எண்ணி தோழர்கள் வியந்தனர்.
அதன் பிறகு 1.45 மணிக்கு ரயில் வந்து ஏறி மறுநாள் காலை 6 மணிக்கு கோவையில் இறங்கி காலை முதல் இரவு வரை அவரது நிகழ்ச்சிகள். தொடர்ந்து பயணப் பட்டு திருச்சி சென்று பிறகு அதற்கு மறுநாள் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ஒரு திருமணம், ஒரு இல்லத் திறப்பு, தோழர்கள் சந்திப்பு, அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சென்று மறுநாள் காலை தஞ்சையில் நிகழ்ச்சி. மதியம் குடந்தை அருகே கபிஸ்தலத்தில் பேசி முடித்து இரவே பயணப்பட்டு விக்கிரவாண்டி கழகத்தின் மூத்த மகளிர் தோழரின் உடல் நலம் விசாரித்து இரவோடு இரவாக சென்னை செல்லும் போது இரவு மணி 12.30...
ஆசிரியர் அய்யாவின் உழைப்பை கண்டு வியந்தோம்!
-தி.என்னாரெசு பிராட்லா , காரைக்குடி
No comments:
Post a Comment