இந்தியாவில் நீரிழிவு நோய் - உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகரிப்பு - மருத்துவ நிபுணர்கள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

இந்தியாவில் நீரிழிவு நோய் - உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகரிப்பு - மருத்துவ நிபுணர்கள் தகவல்

சென்னை, ஜூன் 10 - இந்தியாவில் மொத்தம் 35.5 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோன்று நீரிழிவு நோய் பாதிப்பு 11.4 சதவீதம் பேருக்கும், நீரிழிவு நோய்க்கான ஆரம்ப நிலை பாதிப்பு 15.3 சதவீதம் பேருக்கும் உள்ளதும் அதில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன் சில் நிதியுதவியுடன் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. மொத்தம் 1,13,043 பேரிடம் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நாடு முழுவ தும் அனைத்து மாநிலங்களி லும் 20 வயதுக்கு மேற்பட்டோ ரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.  ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 79 ஆயிரத்துக்கும் அதிகமா னோரிடமும், நகர்ப்புறங்க ளைச் சேர்ந்த 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரி சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.

அதன் முடிவுகள் பன்னாட்டு ஆய்விதழான லான்செட் இத ழில் பிரசுரிக்கப்பட்டது. அந்த விவரங்கள் சென்னையில் 8.6.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில், அய்சிஎம்ஆர் தொற்றா நோய்த் துறை விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ்.தாலி வால், சென்னை நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மோகன், தலைமை நிர்வாகி டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா ஆகியோர் அதில் கலந்துகொண்டனர்.அப்போது அவர்கள் கூறிய தாவது: தொற்றா நோய்களின் பாதிப்புகளைக் கண்டறிய 28 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 31.5 கோடி பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 52 சதவீதம் பேர் பஞ்சாப் மாநிலத் தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று வயிற்றுப் பருமனால் (தொப்பை) 35 கோடி பேரும், உடல் பரும னால் 25.4 கோடி பேரும் பாதிக்கப்பட்டிருப்பது கண் டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில்தான் அதிக அளவில் அத் தகைய பாதிப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.சர்க்கரை நோயைப் பொருத்த வரை நாட்டில் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் ஆரம்ப நிலையில் 13.6 கோடி பேர் இருக்கின்றனர்.  அதீத கொழுப்புச் சத்து பாதிப் புக்குள்ளானோர் 21.3 கோடி பேராகவும், அதில் 50 சதவீதம் பேர் கேரளத்தைச் சேர்ந்தவர் களாகவும் உள்ளனர். ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகர்ப் புறங்களில் தொற்றா நோய்க ளின் பாதிப்பு அதிகமாக இருப் பதை ஆய்வு முடிவுகள் உணர்த் துகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment