புவனேசுவரம்,ஜூன்6 - கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான ஒடிசா மாநிலத்தின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயில்களின் அய்ந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து விட்டதாகவும், சம்பவப் பகுதிக்கு காவல் துறையினரும், ரயில்வே துறையினரும் விரைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலம் பர்காஹ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி 2.6.2023 அன்று வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங் களிலும் சிதறி விழுந்தன. அப் போது, அவ்வழியாக வந்த பெங்க ளூரு_-கவுரா விரைவு ரயில், கோர மண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்தக் கோர சம்பவத்தில் கடுமையான உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. ஏராளமானோர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment