தந்தை பெரியாரின் ஒப்புதல் பெற்றே தி.மு.க. என்னும் ஆலமரம் வளர்ந்துள்ளது என்ற வரலாற்று செய்தியை தந்தைபெரியாரை பார்க்காத எம்மைப் போன்றவரும், இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை பெற்றோம். "90இல் 80 ஆசிரியர் நிகழ்ச்சி" மூலம் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாகரசம்பட்டி பள்ளி விழாவில் அறிஞர் அண்ணா, தந்தைபெரியார் கலந்து கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்து அய்யா அவர்கள் அண்ணா அவர்களுக்கு சால்வை போற்றிய போது "இதுவரை பலநூறு சால்வை போற்றியுள்ளனர் அதுவெல்லாம் என் பதவிக்கு போற்றியனவாகும் ஆனால் தாங்கள் போற்றிய இந்த சால்வை எனக்குப் போற்றியது என்று ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லி தந்தை பெரியாரிடத்தில் அறிஞர் அண்ணா அரசியலில் தொடரவா அல்லது தங்களை பின் தொடரவா (அரசியலை விட்டு, விட்டு) என கேட்டு பெரியாரின் கட்டளையை எதிர்பார்த்து நின்றார் அண்ணா. தொலைநோக்காளரான தந்தை பெரியார் எதிர்கால அரசியல் நிலை குறித்து உணர்ந்து , அண்ணா அவர்களே அரசியலிலேயே தொடருங்கள் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம் என்று சொல்லி அண்ணா அவர்களின் பணியை பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தார் என்ற வரலாற்று செய்தியை கேட்கும் போது மெய் சிலிர்கிறது. அன்று மட்டும் அய்யா அண்ணா பேச்சை கேட்டு அவரை தன் பக்கம் இழுத்திருந்தால் திமுக, அதிமுக போன்ற திராவிட அரசியல் கட்சிகளே இருந்திருக்காது. இதையெல்லாம் அரசியலில் செல்வாக்கு பெற்றுள்ள இளந்தலைமுறையினர் அறிந்து நடந்திட வேண்டும்.திராவிடர் இயக்கத்தின் நேரடி சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த முதல் வரிசை தலைவர் ஆசிரியர் பல்லாண்டு வாழ்க!அதே போன்று மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் தனது உரையில் திராவிடர் இயக்க பொக்கிஷமான ஆசிரியரை பாதுகாத்து வரும் அம்மா மோகனா அவர்களுக்கு பாராட்டை தெரிவித்தது நிகழ்வின் உச்சம் - வாழ்க ஆசிரியர்,வாழ்க திராவிடம்!
- சு.வனவேந்தன், ஒசூர்
No comments:
Post a Comment