பெங்களூரு, ஜூன் 11- மங்களூரு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல ஹிந்து அமைப்புகளுக்கு அரசு நிலத்தை முந்தைய பாஜக அரசு வாரி வழங்கியது. எந்த ஒரு விதி முறையும் இன்றி விருப்பத்திற்கு அளித்த இந்த நிலங்களை திரும் பப்பெற மறு ஆய்வு செய்ய கருநாடகா அரசு உத்தவிட் டுள்ளது.
வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது “ராஷ்ட் ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கு பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசாங்கத்தினால் அவசர அவர்சமாக கடைசி 6 மாதங்களில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் முதலமைச்சருக்கு விவரமான தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அதனை மறுபரி சீலனை செய்ய முதலமைச்சர் சித்த ராமையா இத்துறைக்கு அறிவுறுத் தினார். கடந்த ஆறு மாதங்களில் (டிசம்பர் 2022 முதல்) அவசரமாக அனுமதிக்கப்பட்ட அனைத்து நிலங்களும் மறுஆய்வு செய்யப் பட்டு, இறுதி முடிவுக்காக அமைச் சரவையின் முன் வைக்கப்படும் என்றார்.
நிலம் ஒதுக்கீடு செய்ததில் முந் தைய பாஜக அரசாங்கத்தின் பெரும்பகுதியை மாநில அரசு மறு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார். மேலும் கடந்த அரசின் காலகட்டத்தில் ஹிந்து அமைப்புக ளுக்கு வழங்கிய அனைத்து நிலங் களையும் மறு ஆய்வு செய்ய அமைச்சரவையில் முடிவு செய்யப் படும். கருநாடகாவில் தகுதியுடைய வர்களுக்கும், அரசு நிலம் கிடைக் கச் செய்ய வேண்டும்.
ஆனால் குறிப்பிட்ட நில அமைப்புகளின் பெயரில் கொடுக் கப்பட்டு பின்னர் சில தனி நபர் களுக்கு அந்த நிலம் கொடுக் கப்பட்டுள்ளது இப்படி கொடுக் கப்பட்ட நிலங்கள் திரும்பப் பெறப்படும்.
“அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஜாதி, மத வேறுபாடின்றி அமைப்புகளுக்கு கடந்த ஆறு மாதங்களில் வழங்கப்பட்ட நிலம் மறுஆய்வு செய்யப்படும். உண்மை யான நோக்கங்களுக்காக நிலத் தைப் பெற்ற அமைப்புகளை நாங் கள் தொந்தரவு செய்ய மாட்டோம்.
மேலும் நகரின் மிக முக்கியமான பகுதிகளில் பல மடங்கு விலை பெறும் நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் ஆர்.எஸ்.எஸ் மற் றும் சங் பரிவார் சார்ந்த அமைப்பு களின் பெய ரில் மாற்றப்பட்டுள்ள தாகக் கூறினார். அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள நோக்கம் ஆய்வு செய்யப்படும்" என்றார்.
No comments:
Post a Comment