இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டில்லியில் உள்ள ஒரு ஜெகநாதர் கோவிலில் கட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு, வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் (20.6.2023) இங்கே விநாயகர் கோவில்களைப் போல், அங்கே ஜெகநாதருக்கு தெருவிற்கு தெரு கோவில்கள் உண்டு. அப்படி ஒரு கோவிலில் குடியரசுத் தலைவருக்குக்கூட கட்டை போட்டுத் தடுப்பு றீஅகமதாபாத் ஜெகநாதர் கோவில் 'சாமி'க்கு சாற்றிய பட்டு வஸ்த்ரம் அமித்ஷாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் கோவில் கர்ப்பகிரகத்திற்கு உள்ளேயே வைத்து மரியாதை செய்யப்படுகிறது. றீபெண்ணாக இருந்தாலும் நம்மவா? அதுவும் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அதனால், கர்ப்ப கிரகத்திற்குப் பக்கத்தில் நிறுத்தி எந்த இடைஞ்சலும் இல்லாமல் 'தரிசனம்' செய்ய அனுமதிக்கப்படுகிறார். ஸனாதனம் இதுதானே! பெண் அதிலும் பழங்குடியினத்தவர், கைம்பெண் என்றதும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் வெளியே நிறுத்துகிறதே அவரை...!
குடியரசு நாட்டில் இந்தக் கொடிய ஸனாதனம் இருக்கலாமா? சிந்திப்பீர்!
No comments:
Post a Comment