ஈரோடு, ஜூன் 7 கடந்த 3.06.2023 அன்று காலை 9 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இரா.நற்குணன் தலைமையில், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2.06.2023 ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது.
2. கழகப் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3. வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுலம் ஒழிப்பு நூற் றாண்டு - கலைஞர் நூற்றாண்டு முன் னிட்டு 7 ஒன்றியங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக் கப்பட்டது.
4. மாவட்டத்தில் ஒருநாள் பயிற்சிப் பட்டறையை குருவரெட்டியூரில் நடத் துவது என முடிவெடுக்கப்பட்டது. இம் மாத இறுதியில் குற்றாலம் பயிற்சிப்பட்ட றைக்கு புதிய தோழர்களை அனுப்பி வைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பால கிருட்டிணன், கு.சிற்றரசு, மாவட்ட துணைத்தலைவர் வீ.தேவராஜ், மாநகர தலைவர் கோ.திருநாவுக்கரசு, செயலா ளர் தே.காமராஜ், ப.சத்தியமூர்த்தி, பேரா சிரியர் ப.காளிமுத்து, கி.பிரபு, சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment