வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நூல்கள் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நூல்கள் அறிமுக விழா

கன்னியாகுமரி, ஜூன் 5- கன்னியா குமரியில் பெரியார் நகர், மலங்கரை பவன், புனித பவுல்ஸ் அய்.ஏ.எஸ் அகாடமியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்து கொள்வது?”, “ஆசி ரியர் கி.வீரமணி 90” இரு நூல்கள் வெளியிட்டு விழா  குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக சிறப் பாக நடைபெற்றது.

மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழகச்  செயலாளர்  கோ.வெற்றிவேந்தன் நிகழ்ச்சியினை  ஒருங்கிணைத்து இணைப்புரை ஆற்றினார். திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் நூல் அறிமுக உரையாற் றினார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் உரையோடு நடை பெற்ற நிகழ்வில் கன்னியாகுமரி  பேரூராட்சி மன்றத்  தலைவர்  குமரி  ஸ்டீபன் நூலினை வெளியிட, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பா. பாபு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு கருத்துரையாற்றினார்.திராவிட நட்புக்கழக மாவட்ட பொறுப் பாளர் செ.விஷ்ணு, காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் பி.டி.நெப்போ லியன், வார்டு உறுப்பினர்கள் எம்.சுஜா, ஜே.ஆட்லின்,  எஸ்.வினிட்டா இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், தோழர் ச.ச.மணிமேகலை பா.சு.முத்துவைரவன் கழக தோழர்களும் வரிசையாக வந்து நூல்களை பெற்று மகிழ்ந்தார்கள். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் எழுச்சி உரை யாற்றினார். அகஸ்தீஸ்வரம் ஒன் றிய கழக தலைவர் எஸ். குமாரதாஸ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்லபெருமாள் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திமுக பொறுப் பாளர் அன்பழகன், கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது, மாவட்ட பகுத்தறி வாளர்கழக செயலாளர் எம்.பெரி யார்தாஸ், கழகத் தோழர்கள் சவுந்தர்ராஜன், எஸ். சந்தோஷ் குமார்,டார்ஜன்  மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க செயலாளர் குமரி க.யுவான்ஸ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment