பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் முதல் முதலாக தனது வீட்டில் மின் விளக்கைப் பார்த்த மூதாட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் முதல் முதலாக தனது வீட்டில் மின் விளக்கைப் பார்த்த மூதாட்டி

லக்னோ, ஜூன் 30 - நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் வாழ்வதை நினைத்தால் வியப்பாக உள்ளது.

உத்தரப்பிரதேசத் தலைநகர் லக்னோவில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயதாகும்  மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அவரது குழந்தைகள் மும்பை மற்றும் சூரத்திற்கு வேலைக் குச் சென்று விட்டனர்.

அவர் மட்டும் தனியாக குடிசை வீட்டில் வசித்துவருகிறார். இந்த நிலையில் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் வரை அவரது வீடு உள்ள பகுதிக்கு மின்சாரம் வர வில்லை.

மற்றவர்கள் அருகில் மின்சாரம் உள்ள தெருக்களில் உள்ள வீடு களில் இருந்து மின் சாரத்தை வாடகைக்கு பெற்று பயன்படுத்தி வருகின்றனர். 

ஆனால் ஏழ்மை நிலையில் மூதாட்டியால் மின்சாரத்தை வாடகைக்கு வாங்க முடியவில்லை. 

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அப்பகுதிக்கு வந்த லக்னோ புறநகர் காவல்துறை அதிகாரி அனுகிருதி சர்மா என் பவர் முதாட்டி வீட்டில் மட்டும் வெளிச்சம் இல்லாததைக் கண் டுள்ளார்.

இது பற்றி கேட்ட போது அப் பகுதிக்கு விடுதலைக்குப் பிறகும் இன்றுவரை மின்சாரம் எதுவுமே வசதி  செய்து  கொடுக்கப்பட வில்லை என்று கேள்விபட்டு வியந்து போனார். 

 உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் மூதாட்டி வீட் டிற்கு உத்தரப்பிரதேச மின்சார வாரியத்தோடு தொடர்புகொண்டு அதற்கான கட்டணத்தையும் தானே செலுத்தி ஒரு மின்விளக்கு மற்றும் மின்விசிறியை வாங்கி கொடுத்துள்ளார்.

மின் இணைப்பு வேலைகள் முடிந்த பிறகு தானே சென்று அனைத்தும் சரியாக உள்ளதா என்று சோதனை செய்து கொடுத் தார். மூதாட்டி அந்த அதிகாரிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார். 

மேலும் அப்பகுதியில் உள்ள வர்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுப்பதில் என்ன சிக்கல் என்பதை அறிந்து அதைக் களைந்து மின்சார இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார். 

உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத் தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அரசின் எந்த ஒரு நலத்திட்டங்களும் செல்லாது.

அவர்கள் வேண்டு மென்றால் தண்ணீர் மின்சாரம் போன்ற வற்றை உயர்ஜாதியினர் குடியிருப் பிலிருந்து கட்டணம் கட் டித்தான் பெற்று கொள்ள வேண் டும்.

இந்த நிலையில் தான் மூதாட்டி யின் குடியிருப்பிற்கு காவல்துறை அதிகாரி தானே முன்வந்து மின்சார இணைப்பு வாங்கிக் கொடுத்துள்ளார்.

இருப்பினும் இந்த மின்சார இணைப்பை உயர் ஜாதியினர் விரைவில் துண்டித்து விட்டு அவர்களிடமே காசுக்கு மின்சார இணைப்பை பெறும் நிலையை உருவாக்கி விடுவார்கள் இதுதான் உத்தரப்பிரதேசத்தில் நீண்ட காலமாக நடக்கும் அவலம்.

No comments:

Post a Comment