பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு நாள் கருத்தரங்கம்

திருச்சி, ஜூன் 29 - உலக போதைப் பொருள் ஒழிப்பு நாளான 26.06.2023 அன்று பெரியார் மருந் தியல் கல்லூரி மற்றும் திருச்சி ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யம் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாமினை மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்தியது.

பெரியார் மருந்தியல் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந் தாமரை இக்கருத்தரங்கிற்கு தலைமை யேற்று, இளைய சமுதாயம் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உரையாற்றி னார்.

ஹர்ஷமித்ரா மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநரும் புற்று நோய் அறுவை சிகிச்சை மருத்து வருமான மருத்துவர் க.கோவிந்த ராஜ் பீடி, சிகரெட், பான்மசாலா போன்ற போதை தரும் புகை யிலைப் பொருட்களால் அதிக அளவில் புற்றுநோயாளிகள் உரு வாகி வருவதாகவும்   இதன் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் உரையாற்றினார். 

மேலும் வாய், தொண்டை, உணவுக்குழல், நுரையீரல் புற்று நோய்களால் இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுவதை தடுக்க இதுபோன்ற நலவாழ்வு நிகழ்ச்சி கள் அதிகளவில் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனை வர் அ.மு.இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ண மூர்த்தி, திராவிட முன்னேற்றக்கழக ஒன்றிய செயலாளர் கருப்பையா, கள்ளிக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர் ரேவதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். 

அதனைத்தொடர்ந்து மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமி ழறிஞர் கலைஞூரின் பிறந்த நாளினை முன்னிட்டு முதலமைச் சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்டத்தின் கீழ் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர்கள் மருத்துவர் க.கோவிந்தராஜ் மற் றும் மருத்துவர் சசிப்ரியா கோவிந்த ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

60க்கும் மேற்பட்ட பொது மக்கள் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன டைந்தனர்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியினை ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் நிறுவன மேலாண்மை அலுவலர் சிவ அருணாச்சலம் மற்றும் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் அ.ஜெசிமா பேகம் ஆகி யோர் சிறப்பாக   செய்திருந்தனர்.

No comments:

Post a Comment