சென்னை, ஜூன் 29 பனை மரத்தின் சிறப்பை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘நெட்டே நெட்டே பனைமரமே' என்ற காலப் பேழை புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பனை மரம், அனைத்து பாகங் களையும் மானுடத்திற்கு கொடையாய் அளிக்கும் அற்புதமான மரமாகும். அதன் குருத்தோலை தோரணம் கட்டவும், அழகியல் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. சாரை ஓலை, கூடை முடையவும், பாய் பின்னவும், பச்சை மட்டை வேலி அமைக்கவும், நார் எடுக்கவும் உதவுகிறது.
பனங்காய் நுங்கு, பனம்பழமும் பனை மரம் தருகிறது. பனங்கொட்டை, கிழங்காக மாறி உண்ணப்பயன்படுகிறது. பாளை, பதநீர் பெற உபயோகமாகிறது. ஓலை கூரை வேயவும், பதநீர், கஞ்சி போன்றவற்றை ஊற்றிக்குடிக்க உதவும், பட்டை பின்னவும் பயன்படுகிறது.
பனை மரத்தின் உச்சிப்பகுதி, மரத் தொட்டி செய்ய உதவுகிறது. பத்தை மட்டை தும்பு எடுக்கவும், தரை தேய்க் கும் பிரஷ் செய்யவும் பயன்படுகிறது. நடு மரம், உத்தரம் செய்ய உதவுகிறது. தூர்ப்பகுதி, வட்ட வடிவிலான பத்த லாக பயன்படுகிறது. வேர் மழைக்காலங் களில் நிகழும் மண்ணரிப்பைத் தடுக்க உதவுகிறது.
இதுபோன்ற சிறப்புமிக்கதும் தமிழ் நாட்டின் மாநில மரமான பனையின் முக்கியத்துவம் கருதி, 2021-_2022ஆ-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலாவது வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், பனைமரத்தின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை பொருட்களை மதிப்புக் கூட்டுதல் மூலம் பனைத் தொழிலை மேம்படுத்தவும், பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத் தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வியக்கம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, பனையின் சிறப்பு குறித்து பொதுமக்கள், மாண வர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையிலும், பனையின் சிறப்பை போற்றும் வகையிலும், தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற பனை மரங்கள் அதிகம் காணப்படும் மாவட்டங்களில் களஆய் வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், சேகரிக்கப்பட்ட செய்திகளை உள்ள டக்கிய, 'நெட்டே நெட்டே பனைமரமே' என்ற தலைப்பிலான காலப்பேழை புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 27.6.2023 அன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை, உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் நந்தகோபால், வேளாண்மை ஆணை யர் சுப்பிரமணியன், வேளாண்மை வணிகம் மற்றும் வேளாண் விற் பனைத்துறை இயக்குனர் நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment