பெரம்பலூர், ஜூன் 1 ‘நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத் தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் சார்பில், நான் முதலமைச்சன் திட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு போட் டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலான இலவச பயிற்சி வகுப் பினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் (29.05.2023) அன்று துவக்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர்மாணவ, மாணவிகள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அறிவித்து செயல்படுத்திவரும் நான் முதல மைச்சன் திட்டத்தின் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் சார்பில் போட்டித் தேர்வுகளை இளைஞர்கள் எளிதில் எதிர் கொள் ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியிருக் கின்றது.
இந்த பயிற்சி வகுப்பானது, நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இதே கூட்ட அரங்கில் நடைபெறும். திறன் மிக்க பயிற்றுநர்கள் மூலம் 3 மாதங்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. வங் கித் தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், இரயில்வே துறை வேலைவாய்ப் புகள் உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள் ளும் வகையில் உங்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். போட்டித் தேர்வுகளுக்கான கையே டுகள் உங்களுக்கு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை முறையாக பயன் படுத்திக் கொண்டு அனைவரும் அரசுப் பணிகளைப் பெற்று வாழ் வில் சிறந்து விளங்கிட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான கையேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்வழங்கினார்.
இந்நிகழ்வில் வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் திருச்சி மண்டல இணை இயக்குநர் சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment