ஒன்றிய பா.ஜ.க. அரசின் மீது காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டு களை கூறி வருகிறார். அந்த வகையில் நேற்று (20.6.2023) அவர் ஒன்றிய அரசு துறைகளில் காலியிடங்கள் எண் ணிக்கை இரு மடங்காக உயர்ந்து விட்டதாகக்கூறி சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் ஹிந்தியில் வெளியிட்ட பதிவு வருமாறு:-
மோடியின் அரசின் முன்னுரிமை, ஒரு போதும் காலியிடங்களை நிரப்புவதில் இருந்தது இல்லை. 2014ஆம் ஆண்டுடன் (பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த காலகட்டம்) ஒப்பிடுகையில் ஒன்றிய அரசில் (பாதுகாப்புத்துறை சாராத) சிவிலி யன் பணிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. எல்லாவற்றையும் சேர்த்து, ஒன்றிய அரசுத் துறைகளில் 30 லட்சம் காலியிடங்கள் உள்ளன.
உணர்வில்லாத மோடி அரசு, தாழ்த்தப்பட்டோர்களுக்கு எதிரானது, பழங்குடியினருக்கு எதிரானது, பிற்படுத்தப்பட் டோருக்கு எதிரானது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரி வினருக்கு எதிரானது. எனவேதான் அது காலிப் பணியிடங் களை நிரப்பாமல் இருக்கிறது. சில ஆயிரங்கள் காலியிடங்களை நிரப்புவதற்கான நியமன ஆணைகளை வழங்கி, மோடி கைதட்டல்களைப் பெறுவதற்காக இளை ஞர்களின் கண்களில் மண்ணைத் தூவுகிறார் என்று அவர் கூறி உள்ளார். மேலும், ஒன்றிய அரசு துறைகளில் அனுமதியளிக்கப்பட்ட இடங்களில், 2014ஆம் ஆண்டு 11.57 சதவீதமாக இருந்த காலியிடங்கள், 2022ஆம் ஆண்டு 24.3 சதவீதமாக இரு மடங்கு உயர்ந்து இருப்பதைக் காட்டுகிற வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment