பகுத்தறிவு கலைத்துறை - ஒளிப்படப் போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

பகுத்தறிவு கலைத்துறை - ஒளிப்படப் போட்டி

வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் மனிதநேய ஒளிப்படப் போட்டி

வைக்கம் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக பகுத்தறிவு கலைத் துறையின் சார்பில் மனிதநேய ஒளிப்படப் போட்டி நடத்தப்பட உள்ளது.

போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:

ஒருவர் எத்தனை ஒளிப்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

ஒளிப்படங்கள் இயற்கையாக அமைந்தவையாக இருத்தல் வேண்டும்.

பிறருடைய ஒளிப்படங்களை அனுப்பக் கூடாது

மனித நேயத்தை குறிக்கும் வகையில், பெரியாரியல் தத்து வங்கள், கொள்கைகளை போற்றிடும் வண்ணமும், பகுத்தறிவு சிந்தனைகள், மூட பழக்க வழக்கங்களுக்கு எதிரான விளக் கங்கள், மனித உரிமைகளை போற்றுதல், ஜாதி மத அடக்கு முறைகளுக்கு எதிர்வினையாற்றுதல், பெண்ணியம் போன்ற கருத்துகளை வெளிப்படுத்தும் விதமாக ஒளிப்படங்கள் இருத்தல் வேண்டும்.

ஒளிப்படங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி: 30.06.2023

தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று ஒளிப்படங்களுக்கு விருது சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைகள் முதல் பரிசு: ரூ.5000, இரண்டாம் பரிசு: ரூ.3000, மூன்றாம் பரிசு: ரூ.2000 வழங்கப்படும். முதல் 10 ஒளிப்படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்

போட்டி நடத்துநர்களின் முடிவே இறுதியானது.

"மனிதநேய ஒளிப்பட போட்டி" எனத் தலைப்பிட்டு புகைப்படங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: karunajv2017@gmail.com, udumalaivadivel@gmail.com


தொடர்பு எண்கள்: 9787632684, 9940489230

- மாரி கருணாநிதி

மாநில செயலாளர்,  கலைத்துறை


No comments:

Post a Comment