செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 26, 2023

செய்திச் சுருக்கம்

அபாயம்

இந்தப் பருவ மழையில் எல்நினோ நிகழ்வு உருவாகும் சாத்தியக் கூறுகள் கிட்டத்தட்ட 70 சதவீதம் இருப்பதால், இதன் காரணமாக உணவுப் பொருள்கள் விலை உயரும் அபாயம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

திரும்பியவை

ரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்த பின்னர் வெளியில் புழக்கத்தில் இருந்த ரூ.3.62 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது ரூ.2.41 கோடி பணம் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதில் 85 சதவீதம் வைப்புகளாகவும், மீதி உள்ளவை பணப் பரிமாற்றம் மூலமும் வந்துள்ளன என ரிசர்வ் வங்கி கூறுகிறது.

பரிசோதனை

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமுகாம் மூலமாக 1.88 லட்சம் பேர் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment