கோவை தொண்டாமுத்தூரில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் இளைஞர்களிடையே எழுச்சி-புத்தாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 23, 2023

கோவை தொண்டாமுத்தூரில் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் இளைஞர்களிடையே எழுச்சி-புத்தாக்கம்

கோவை, ஜூன் 23 கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தொண்டாமுத்தூரில் கருப்புச் சட்டை மாணிக்கம்  அவர்களின் தோட்டத்தில் பெரியாரியல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது

கருத்தரங்கத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு தலைமை தாங்கினார். கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும், வரவேற்று செ.சுரேஷ்குமார் பேசினார்.

நிகழ்வில் மாவட்ட தலைவர் திக செந்தில்நாதன், மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநகர தலைவர் ம.சந்திரசேகர், மாநகர செயலாளர் ச.திராவிடமணி, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபா கரன், மருத்துவர் கிருஸ்னகோபால் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் தொடக்கமாக மகளிரணி தோழர் ஆலாந்துறை செ.முத்துமணி கழகக் கொடியேற்றி வைத்தார்.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி துணைத்தலை வர் மு.ப.நடராசன், வடவள்ளி பகுதி திமுக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து கருத்தரங்கில் முதல் நிகழ்வாக ‘‘திராவிட இயக்க வரலாறு குறித்தும், சமூக நீதி வரலாறு'' குறித்தும் பேராசிரியர் காளிமுத்து, இரண் டாம் அமர்வில் ‘‘திராவிட இயக்க போராட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்த பயன்கள்'' குறித்து, எளிமையாக புரிந்து கொள்ள கூடிய வகையில் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து  மதிய உணவுக்கு பிறகு நடைபெற்ற மூன்றாவது அமர்வில் மருத்துவர் இரா.கவுதமன் ‘‘அறிவியலும் மூடநம்பிக்கையும்'' என்ற தலைப் பில் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு ‘‘சாமியாடுதலும் - பேயாடுதலும் ஒரு வகை நோய்'' என மருத்துவ ரீதியாக உள்ள ஆதாரங்களை எடுத்துச் சொல்லி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து உரையாற்றினார்.

நிகழ்வில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ச.குப்புசாமி, தொண்டாமுத்தூர் திமுக நகர செய லாளர் தொ.வெ.குமார், ஆலந்துறை பேரூராட்சி தலைவர், மணிமேகலை ராமமூர்த்தி, தொண்டா முத்தூர் திமுக சஞ்சய்குமார், கெம்பனூர் திமுக கதிரவன் மற்றும் தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வம், மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுச்சாமி, விடுதலை வாசகர் வட்டம் கு.வெ.கி செந்தில், ப.க. மாவட்ட செயலாளர் அக்ரி நாகராஜ், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், தொழிலாளரணி பொருளாளர் முத்துமாலையப்பன், வடக்குபகுதி கழக செயலாளர் கவி கிருஷ்ணன், வெ.குமாரராஜா, இரா.வைத்தியலிங்கம், பொள்ளாச்சி செழியன், முத்துகணேசன், நாத்திகன் சா.ராசா, செ.தமிழ்மணி, அருணாசலம், ச.மணிகண்டன், உத்திரிநாத், 

ப.ஜெயந்தி, செந்தூர்ராஜ், வள்ளி மயில், சம்பத், வ.பிரபாகரன், ரா.லோகேஸ்வரி, ரா.திவாகர், வழக் குரைஞர் சுந்தர்ராஜ், வி.எஸ். ரங்கராஜ், ம.பூமதி, அ.மு.ராஜா, தோழர் பொன்ராஜ்,  அப்துல், உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவாக கருப்பு சட்டை மாணிக்கம் நன்றியுரையாற்றினார்.

வருகை தந்த அனைவருக்கும் காலையில் தேநீர், பலகாரம், மதியம் உணவு , மற்றும் மாலை தேநீர், பலகாரம் ஆகியவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!

இந்த பெரியாரியல் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற கருப்பு சட்டை மாணிக்கம் தமது தோட்டத்தில் இடமும் கொடுத்து வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றதோடு, பெரியார் படிப்பகம் மற்றும் பேருந்து நிலைய நிழற்குடை ஆகியவை கட்டிக்கொள்ள தொண்டா முத்தூர் பேரூராட்சிக்கு  2 சென்ட் இடத்தை வழங் குவதாக அறிவித்து தமது அன்பை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியது. பெரியாரியல் கொள்கை மீது அவர் கொண்டிருந்த உணர்வை வெளிப்படுத் தியது.

இந்த கருத்தரங்கம் நடைபெற்ற பகுதியில் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்த காட்சி கழகத் தோழர்களின் உழைப்பை எடுத்து காட்டி யது. 

கோவை தொண்டாமுத்தூரில் 

பெரியாரியல் பயிற்சி வகுப்பில் இளைஞர்களிடையே எழுச்சி-புத்தாக்கம்

பெரியார் புத்தகம் நிலையம் மற்றும் 

ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் சார்பில் கழக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன புதிய பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை பார்வை யிட்டு கொண்டு இருந்தனர். அதை கவனித்த மருத்துவர் கிருஸ்னகோபால் புதிய தோழர்கள் பெண்கள் உள்பட அனைவருக்கும் தமது செல வில் புத்தகங்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் சார்பில் கழக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன புதிய பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை பார்வை யிட்டு கொண்டு இருந்தனர். அதை கவனித்த மருத்துவர் கிருஸ்னகோபால் புதிய தோழர்கள் பெண்கள் உள்பட அனைவருக்கும் தமது செல வில் புத்தகங்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

No comments:

Post a Comment