ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 5 ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என மதுரையில் தொல்.திருமாவளவன் கூறினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:- ஒடிசா ரயில் விபத்தில் பலர் பலியாகி உள்ளார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து, உலக அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவாக இருக்கிறது. கவாச் என்கிற பாதுகாப்பு நவீன தொழில் நுட்பக்  கருவியை போதுமான அளவு, முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்திய ஆட்சியாளர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்வதை விடஅரசு துறைகளை எல்லாம் தனியார் மயமாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது அவர்களின் செயல் திட்டத்தில் ஒன்றாக உள்ளது. அதனால்தான் புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வில்லை. ரயில்வே துறையில் தேவை யான பணியாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை நியமனம் செய் திருந்தால் இப்படி ஒரு கோர விபத்து நடந்திருக்காமல் தடுத்திருக்க முடியும் என்ற கருத்துகள் எழுகின்றன. இந்த தார்மீக கருத்தை ஏற்று குறைந்தபட்சம் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சராவது பதவி விலக வேண்டும். ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தால், இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறியும் விசாரணையை முழுமை யாக நடத்த முடியாது.

இந்த கோர விபத்து நடந்தவுடன் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக் கையில் ஈடுபட்டது பாராட்டுதலுக் குரியது. அந்த நாளை துக்க நாளாக அறிவித்தது மட்டுமில்லாமல் கலை ஞரின் நூற்றாண்டு தொடக்க நிகழ்ச் சியை ரத்து செய்துவிட்டு 2 அமைச் சர்களை ஒடிசாவிற்கு அனுப்பியதோடு, அதிகாரிகள் குழுவையும் அனுப்பி, ஒடிசா மாநில அரசோடு இணைந்து மீட்பு பணியில் ஈடுபடும் நடவடிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற் கொண்டு இருக்கிறார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, ஆணவக் கொலை நடப் பதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு சம்பட்டி அடியை கொடுத்து இருக் கிறது. தமிழ்நாடு அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற் றுவதற்கு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மதுரை ஒத்தக்கடை திருமோகூரில் கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமூக மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். திருமோகூர் சம்ப வத்தை கண்டித்து மதுரையில் வருகிற 12-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment