திருப்பத்தூர், ஜூன் 1- திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன் பணி நிறைவு விழா மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச் செல்வன் இரயில்வே மின்வாரியத் தில் 1991 ஆண்டு பணியில் இணைந்து 2023 மே மாதம் இறுதி யில் 32 ஆண்டுகள் பணி புரிந்து, பணி ஓய்வு பெற்றார். அதை சிறப் பிக்கும் வகையில் பணி நிறைவு விழா 28.05.2023 அன்று மதியம் 12 மணியளவில் கலைமகள் கல்லூரி, நாட்றம்பள்ளியில் நடைபெற்றது.
இந்த பணி நிறைவு விழாவில் கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மருத்துவர் சிவாவரவேற்புரையாற்றினார்.
மாவட்ட பகுத்தறிவாளர் செய லாளர் வே.அன்பு, மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப் பாளர், நகர்மன்ற மேனாள் உறுப் பினர் எம். என். அன்பழகன், மாவட்ட அமைப்பாளர் நரசிம்மன், எழுத்தாளர் மன்ற தலைவர் நா.சுப் புலட்சுமி, ஆசிரியரணி பொறுப் பாளர் வெங்கடேசன், மேனாள் தலைமை ஆசிரியர் குணசீலன், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா, கலைமகள் கல்லூரி தாளாளர் சி. கயல்விழி ஆகியோர் சி.தமிழ்ச்செல்வனின் பணிகள் குறித்தும், அரசு பணிக் காலத்திலும் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் பற்றால் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் வாழ்த்திப் பேசி சிறப்புரையாற்றினர்.
இறுதியாக மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தோழருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து உரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது "என்னால் கழகத்திற்கு வந்து எனக்கு பல வகையில் இயக்க ரீதியாக ஒத் துழைப்பு கொடுத்து பல போராட் டங்களிலும், ஆர்ப்பாடமடங்களி லும் கலந்து கொண்டு என்னுடைய கழகப் பணியை பகிர்ந்து கொண்ட உற்ற தோழன் சி.தமிழ்ச்செல்வன் இனி வரும் காலங்களில் கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கழகத் தோழர் கள் நகரத் தலைவர் காளிதாஸ்,மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.ஏ.சிற்றரசன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், சோலை யார்பேட்டை ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர் தா. பாண்டியன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோ. திருப்பதி, சுந்தரம் பள்ளி ஊராட்சி கழக தலைவர் மா.சங்கர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் தே. பழனிசாமி, நகர அமைப்பாளர் கா.முருகன் மற்றும் தோழர்கள் பெரியார் செல்வம்,ஏடிஜி இந்திர ஜித், ஜான்சி ராணி, மாவட்ட மகளிர் பாசறை ரா. கற்பகவல்லி, சோலை யார்பேட்டை நகர செயலாளர் லட் சுமணன், ஆகியோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இறுதியாக மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் சி. தமிழ்ச் செல்வன், அவருடைய வாழ் விணையர் மாவட்ட மகளிர் பாசரை தலைவர் த.சாந்தி ஆகியோர் ஏற்புரையாற்றினர்.
திருப்பத்தூர் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெ. கலை வாணன் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment