பிஜேபியின் அரசியல் தந்திரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 24, 2023

பிஜேபியின் அரசியல் தந்திரம்

மக்களவைத் தேர்தலில்  70 தொகுதிகளில் முஸ்லிம்கள் வேட்பாளர்களாம்! 

புதுடில்லி, ஜூன் 24- நாடு முழுவ திலும் சிறுபான்மையினர் வாக்கு களை பாஜக குறி வைக்கிறது. முதன்முறையாக தேசிய அளவில் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

மாறிவரும் அரசியல் சூழலில் அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அமைக்கும் வியூகத்தை பொறுத்து வெற்றி அமையும் என எதிர் பார்க் கப்படுகிறது. இதற்காக, எதிர்க் கட்சிகள் ஒன்றிணைய, பீகாரின் பாட்னாவில் 27 கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடுகின்றனர். 

அதேசமயம் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக வும் வியூகம் அமைக்கிறது. இதில், முதன்முறையாக முஸ்லிம்களின் வாக்குகள் முக்கிய பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையும் பாஜக, சிறு பான்மையினருக்கு எதிரான அரசி யல் நடவடிக்கைகளை ஆட்சி அமைக்கப் பயன்படுத்தியது. சமீப காலமாகத் தாம் போட்டியிட்ட மக்களவை, சட்டப்பேரவை தேர் தல்களில் ஒரு முஸ்லிமை கூட போட்டியிட வைக்கவில்லை.

இதுபோல் அல்லாமல் வரும் மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக முஸ்லிம்களுக்கும் தம் கட்சி சார்பில் வாய்ப்பளிக்க உள் ளது. இதற்கு 2014-இல் வீசத் துவங் கிய ‘மோடி புயலின்’ வீரியம் குறைந் திருப்பது காரணமாகக் கூறப்படு கிறது. இதை சமாளிக்க பாஜகவிற்கு மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளும் தேவைப்படுகிறது.

மோடியின் திட்டம்: பாஜக நடத்திய ஆய்வின்படி, நாடு முழுவ திலும் சுமார் 70 தொகுதிகளில் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இவற்றில், முஸ்லிம்களை போட்டியிட வைப்பதால் தம் கட்சி மீதான களங்கத்தை போக்க முடியும் எனவும் பாஜக நம்புகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமான இது, கடந்த வருடம் அய்தராபாத் தில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக் கப்பட்டது.

பிரதமர் மோடியின் திட்டம், சமீபத்தில் முடிந்த உத்தரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக நடைமுறைப்படுத்தப்பட் டது. இதில் போட்டியிட்ட சுமார் 400 முஸ்லிம்களில் சுமார் 60 பேர் வெற்றி பெற்றனர். 

இதன் பலனாக, மக்களவை தேர்தலிலும் தனது முஸ்லிம்கள் சூத்திரத்தை அம லாக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் இனி பாஜகவை ‘முஸ்லிம் விரோதக் கட்சி’ எனக் குற்றம் சுமத்த முடியாத நிலை ஏற்படும்.

பாஜகவின் புதிய திட்டத்தில் கேரளாவில் ராகுல் காந்தி வென்ற வயநாடு முக்கிய இடம் பெற் றுள்ளது. இங்கு பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி குறித்து அவரது கட்சியின் மேனாள் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூட்டம் நடத்தினார். வயநாடு உள்ளிட்ட 70 தொகுதிகளிலும் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு தனியாகக் குழு அமைத்து களம் இறங்க உள்ளது. இதில், பெண்களுக்காக என கருத்தரங் குகளும், சிறப்புக்கூட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

முஸ்லிம் வாக்காளர்கள் நிறைந்த தொகுதிகளாக, உ.பி.யில் மிக அதிகமாக சுமார் 20 தொகு திகள் உள்ளன. அடுத்த நிலையில் மேற்கு வங்கத்தில் 15 உள்ளன. கேரளா மற்றும் அசாமில் தலா 6 தொகுதிகள் அடையாளம் காணப் பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் 5, பீகாரில் 4 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 3 தொகுதிகள் உள்ளன. மகாராட் டிரா மற்றும் தெலங்கானாவிலும் ஒரிரு தொகுதிகளை பாஜக ஆராய்ந்து அறிந்துள்ளது. இப்பட் டியலில், அரியாணா, டில்லி, கோவா மற்றும் லட்சத் தீவிலும் தலா ஒரு தொகுதி முஸ்லிம்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.


No comments:

Post a Comment