கோர ரயில் விபத்து உண்மைக் காரணத்தை மறைக்க முயலும் ஒன்றிய அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

கோர ரயில் விபத்து உண்மைக் காரணத்தை மறைக்க முயலும் ஒன்றிய அரசு!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு!

கொல்கத்தா, ஜூன் 10- ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளியே வர விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி யுள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த, காயம டைந்த மேற்கு வங்க மாநி லத்தை சேர்ந்த பயணிகளின் உறவினர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதற் காக மேற்கு வங்க அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி கொல் கத்தாவில் நடந்தது. அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கலந்து கொண்டு நிவாரண நிதி மற்றும் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

விழாவில் அவர் பேசும் போது,' ஒடிசா ரயில் விபத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 86 பேரை இதுவரை அடையாளம் காண முடிந்துள்ளது. 

172 பேர் பலத்த காயங்களுடனும், 635 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளது. பாலசோர் விபத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இதை பேச விடாமல் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 16 நகராட்சிகளில் சோதனை செய்ய சி.பி.அய்.யை அனுப்பியுள்ளது. இந்த சோதனைகள் மூலம் உண்மையை உங்களால் (பாஜக அரசு) மறைக்க முடியாது. உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விபத்தில் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப் பினர்களும் விபத்துக்கான காரணத்தை அறிய விரும்பு கிறார்கள். அதன் பின்னணியில் உள்ள குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். 

இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment