அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுகின்றன - முதலமைச்சர் பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 29, 2023

அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெறுகின்றன - முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, ஜூன் 29  அரசுப் பணிகள் சுனாமி வேகத்தில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான இரண்டா வது ஆய்வுக்கூட்டம் தலைமைச் செய லகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (28.6.2023) நடை பெற்றது. முன்னதாக கடந்த 16.6.2023 அன்று நடைபெற்ற முதற்கட்ட ஆய்வுக் கூட்டத்தில் 11 துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில்,   13 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 55 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 35 எதிர்கால திட் டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில், துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து விளக்கியதாக தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது-

தமிழ்நாட்டின் எதிர்கால கட் டமைப்பு, வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அவற்றை நமது அரசு கண்ணும், கருத்துமாக செயல்படுத்தி வருகிறது. மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக செயல்படுவதில் மூலதன முதலீடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அனைத் துத் துறையின் வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு, அந்தந்த துறைகளின் தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டது. மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு காரணிகளை மையமாக க் கொண்டு தமிழ்நாட்டின் வளர்ச்சி இப்போது வடிவமைக்கப்பட்டு, திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.

முன்னுதாரணமாக....

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சில திட்டங்கள், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளன. இவற்றையெல்லாம் கருத் திலே கொண்டுதான், இந்தியாவின் வளர்ச்சியில் "தமிழ்நாடு இன்ஜினாக" உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டியதை நான் இந்த நேரத்தில் நினைவுகூர விரும் புகிறேன்.   கடந்த முறை ஆய்வின்போது, உங்களது துறைகளுக்கான முத்திரைத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்ட பணி முன்னேற்றத்தினை தற்போது ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரும்பான்மையான திட்டங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒரு சில திட்டங்களில் இன்னும் தொய்வு நிலை இருப்பதை நம்மால் உணர முடிகிறது.

தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ் நிலைகளான நிலம் கையகப்படுத்துதல், போக்குவரத்து வசதி, ஏற்றுமதிக்கான வசதிகள், உள்கட்டமைப்புகளை உரு வாக்குதல் உள்ளிட்ட பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அத்தகைய சவால்களை சந்திப்பதில் நமது அரசு தீவிர கவனம் செலுத்தி, பிரச்சினைகளுக்கு இடம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப் போதுதான் உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தொழில்கள் தொடங்கிட வழி ஏற்படும். இதற்கான ஒத்துழைப்பினை அனைத்துத்துறை அலுவலர்களும் நல்கிட வேண்டு மென்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். 

உங்கள் பங்களிப்பினால்

அரசுப் பணிகள்   சுனாமி வேகத்தில்கூட நடைபெறும் என்பதனை எடுத்துக் காட்டக்கூடிய வகையில் நாம் சில திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். குறிப்பாக, குறிப்பிட்ட காலத்தில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட் டுள்ளதை பொது மக்களும், நடு நிலையாளர்களும் பாராட்டுகிறார்கள். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறக்கப்படவிருக் கிறது. இவை அனைத்தும் உங்கள் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியமாகி யுள்ளது. எனவே, ஒவ்வொரு திட்டத்திலும் உங்களது அர்ப்பணிப்பு, பங்களிப்பு அவசியம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். நீங்கள் திட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கும் போதுதான், அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் நாம் கொண்டு வர முடியும்.

கடைக்கோடி மனிதருக்கும்

கோட்டையில் தீட்டுகிற திட் டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டு, மாவட்டங்கள் தோறும், அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 'முதல்வரின் முகவரி' திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப் பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் எத்தனை வேகமாக செயல்படுத் தப்படுகின்றன என்பதை நாட்டு மக்கள் கண்கூடாகப் பார்த்து வருகின்றனர்.   எனவே, திட்டங்களைப் பொறுத்த வரையில், அவற்றை அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அந்த திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதிலும் நாம் தனிக் கவனம் செலுத்த வேண்டும். திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்படும் கால தாமதம் திட்டச் செலவினத்தை அதிகப்படுத்தும்; மக்களுக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் உணர்ந்து, திட்டப் பணிகளை துரிதமாகவும், தரமாகவும் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாகவும், வளமான மாநிலமாகவும் உருவாக்கிட வேண்டும்; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் போன்ற உயரிய இலட்சியத்தோடு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கும் நமது அரசுக்கு, நீங்கள் உங்களது ஒத்துழைப்பினை என்றென்றும் நல்கிட வேண்டும்' என்று முதலமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். 

இக்கூட்டத்தில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென் னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், மற்றும் பல அமைச் சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.   


No comments:

Post a Comment