சென்னை, ஜூன் 10 - வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே உள்ள இலவச மின்சார சலுகை தொடரும். அதே சமயம், வணிகம் மற்றும் தொழில் மின் இணைப்புகளுக்கு யூனிட் டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை கட்டண உயர்வு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அர சின் சார்பில் 8.6.2023 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது,
ஒன்றிய அரசின் உத்தரவுப்படி, மின் எரிபொருள் மற்றும் கொள் முதல் விலை உயர்வை உடனுக்கு டன் நுகர்வோரிடம் இருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசு வெளியிடப்பட்ட உத்தரவுப்படி, இந்த விலை உயர்வை மின் கட்டண உயர்வு மூலமாக, நுகர்வோர்களி டம் இருந்து பெற வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வால் ஏற்படக்கூடிய சுமையைக் குறைக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி, அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும் வகை யில், கட்டண உயர்வு முறையை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்தது.
இந்த விலை உயர்வுக்கான கார ணியாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்துக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணை முந் தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கட்டண உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் உயர்வு: மின் சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி, ஜூலை மாதத்தில் 4.7 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். இந்த நடைமுறையை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தின் உத்தரவைச் செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். இதன்படி, கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டது.
இந்த உயர்வின்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம் ஆய் வுக்கு உட்படுத்தப்பட்டது. இப் போது, கட்டண உயர்வுக்கான விலைக் குறியீட்டு அளவானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பதிலாக, ஆகஸ்ட் மாதத்தின் விலைக் குறியீடு எடுத்துக் கொள் ளப்பட்டது. இதனால், கட்டண உயர்வின் அளவானது 4.7 சதவீதத் தில் இருந்து 2.18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இந்தக் குறைந்த கட்டண உயர் வில் இருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், வீட்டு இணைப்பு நுகர்வோருக்கு ஏற்படும் 2.18 சதவீத உயர்வை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள் ளும். இதற்கான தொகையை மின் சார வாரியத்துக்கு மானியமாக தமிழ்நாடு அரசு அளிக்கும்.
யாருக்கு சலுகை தொடரும்?
தமிழ்நாடு அரசின் முடிவு காரணமாக, வீட்டு இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக் காது. வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்ற வற்றுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்படும்.
வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மிகக் குறைந்த அளவில் மின் கட்டணம் உயரும். வணிகம் மற் றும் தொழில் மின் இணைப்புகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment