23.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉தெலங்கானா மாநில 10-ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் அரசமைப்புச் சட்ட முகப்புரை பகுதியில், சமத்துவம், மதச்சார்பின்மை வார்த்தைகள் நீக்கப்பட்டிருப் பது சர்ச்சை.
👉 காங்கிரஸ் கட்சி அனைவரையும் அரவணைத்து சென்றால் தான், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு சாத்தியம் என்கிறது தலையங்க செய்தி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு வள்ளலார் அமைப்புகள் கடும் கண்டனம்.
👉ஒரு குடும்பம் போல பாஜகவை எதிர்த்து போராடு வோம் நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்ற, மக்கள் பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்' என மம்தா பேட்டி.
👉 மெரினா கடற்கரை அருகே கலைஞர் பேனா நினைவு சின்னத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
👉 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான திட்டம் பாட்னா சந்திப்பில் முடிவு செய்யப்படும். குறைந்தபட்ச பொது திட்டம் உருவாக்கப்படும் என தலைவர்கள் கருத்து.
👉இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத் தக்கது, இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியுடன் பேச வேண்டும் என அமெரிக்க மேனாள் அதிபர் ஒபாமா பேட்டி.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment