கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.6.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* பொது சிவில் சட்டத்திற்கு சிரோமணி அகாலி தளம் கடும் எதிர்ப்பு; ஆம் ஆத்மி கட்சி ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் துப்பாக்கியால் சுடப்பட்டார். வயிற்றில் தோட்டா பாய்ந்தது. உ.பி. யோகி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்.
* ஒன்றிய அரசின் டில்லி அவசரச் சட்டம் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும், அம்பேத்கரின் எண்ணங்களுக்கும் எதிரானது என உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி மதன் லோக்கூர் கருத்து.
* திருநங்கைகளை ஓபிசி பிரிவில் சேர்ப்பதால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்ள திருநங்கைகளும் அப்
பிரிவில் சேர்க்கப்படும் நிலை ஏற்படும். இது அரச மைப்புச் சட்டத்தின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதி ரானது என்கிறார் சென்னை வழக்குரைஞர் ஆர். கண் மணி.
* அண்மையில் அமெரிக்காவில் ஊடகவியலாளர் சந்திப்பில், பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது, அது இந்தியாவின் ஆன்மாவில் உள்ளது, அதன் இரத்தத்தில் உள்ளது” என்று கூறினார். ஆனால் அப்படி எதுவும் மக்களிடையே இல்லை. நிர்வாகத்தின் அத்துமீறல் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் பலவீனம் ஆகியவற்றின் வெளிப் படையான நிகழ்வுகள் இருந்தபோதிலும், தீவிர எதிர்ப்பு எதுவும் குடிமக்களிடம் இருந்து வெளிப்படவில்லை என்கிறார் பத்திரிகையாளர் சகரிகா கோஸ்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பிற்படுத்தப்பட்டோர் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு வலி யுறுத்த வேண்டும் என ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பேச்சு.
தி இந்து:
* இந்திய ரயில்வேயில் சுமார் 2.74 லட்சம் பணியி டங்கள் காலியாக உள்ளன, ரயில் பாதுகாப்பு பிரிவில் மட்டுமே 1.7 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்.
தி டெலிகிராப்:
* ஏழை மற்றும் நடுத்தர மக்களை மோடி அரசு மறந்து விட்டது. இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்றும், வேலைவாய்ப்பு இருந்தால் வருமானம் குறைவு என்றும் பணவீக்கத்தால் சேமிப்பு இல்லை என்றும் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment