பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் துறைக்கான உலகளாவிய பணி வாய்ப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 23, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தியல் துறைக்கான உலகளாவிய பணி வாய்ப்பு குறித்த சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சி, ஜூன் 23- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யில் ஈஸி லிங்க்(Eazy Link Academy) நிறுவனத்தின்  சார்பில்  19.06.2023 அன்று மாலை 4 மணி யளவில் மருந்தியல் துறைக்கான உலகளாவிய பணிவாய்ப்பு குறித்த சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் ச. இராஜேஷ் வரவேற்புரையாற்றினார். ஈஸி லிங்க் நிறுவனத்தின்  செயல் இயக்குநர் சோனி அகாரா மருந் தியல் துறையில் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய பணிவாய்ப்புகள் குறித்து உரையாற்றினார். 

மேலும் அதிகரித்து வரும் நோய்களின் பெருக்கத்திற்கேற்ப மருந்துகளின் தேவைகளும் மருந்தாளுநர்களின் தேவைக ளும் உலக அளவில் அதிகரித் துள்ளதாகவும் மருந்தாளுநர்களுக்கு எதிர்கால பணிவாய்ப்பு கள் பிரகாசமாக உள்ளதாகவும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து  ஈஸி லிங்க் நிறுவனத்தின் மேலாளர் பிரியா ராஜீவ் மாணவர்களின் சந் தேகங்களுக்கு விளக்கமளித்தார். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல் வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி, ஈஸி லிங்க் நிறுவனத்தைச் சார்ந்த சிறீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச் சிக்கு பயிற்சி மற்றும் பணியமர்த் தும் பிரிவின் துணை இயக்குநர் பேராசிரியர் எம்.கே.எம். அப் துல் லத்தீஃப் நன்றியுரையாற்றி னார். 

மருந்தியல் துறையில் பணி வாய்ப்பை உருவாக்கும் இச் சிறப்பு கருத்தரங்கில் இளநிலை மற்றும் முதுநிலை மருந்தியல் மாணவர்கள் 200 பேர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment