தூத்துக்குடி, ஜூன் 7- தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பெரி யாரை எப்படிப் புரிந்து கொள்வது ஆசிரியர் கி. வீரமணி 90 இரு நூல்கள் அறிமுக விழா 1.6.2023 அன்று மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட கழகச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றி னார். மாவட்ட கழகத் தலைவர் மு.முனி யசாமி தலைமை வகித்தார் காப் பாளர் சு.காசி பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் ச.வெங்கட் ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்க உரையாற்றினார் .
காப்பாளர் மா.பால்ராசேந்திரம் நூலறிமுகவுரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் தோழர் பி.கே. ஆறு முகம் நூலினை வெளி யிட்டு வைக்கம் போராட்டச் சிறப்பினையும் அனைத்து தளங்களிலும்பெரியாரின் உழைப்பு பரவிக்கிடக்கிறது என கருத்துரையாற்றினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் முகமது இக் பால் நூல்களைப் பெற்றுக் கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் ஓய்வறியா தொண்டினை விளக்கி உரையாற்றினார் . வடக்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எப்.எம்.ராகுல் உள்ளிட்ட ஏராளமான இன உணர்வாளர்கள் நூல்களை பெற்றுக்கொண்டார்கள் .
திராவிடர் கழக சொற்பொழி வாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார். மாநகர இளைஞரணி அமைப்பாளர்
இ.ஞா.திரவியம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment