தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம் தமிழ்நாட்டை உலக அளவில் உயர்த்துவோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 1, 2023

தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம் தமிழ்நாட்டை உலக அளவில் உயர்த்துவோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை,ஜூன்1- தமிழ்நாட்டை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்வதே லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாட்டில் பத்தாண்டுகால இருட்டை விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிடமாடல் அரசு. தொழில்வளம் பெருகி, வேலை வாய்ப்பும், உற்பத்தியும் அதிகரித்தால் தான் பொருளாதாரம் முன்னேறும். அதற்காகத்தான் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றேன். பயணத்தை வெற்றிகரமாக முடித்து, தமிழ்நாடு திரும்புகிறேன்.

சிங்கப்பூரில் முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், தொழில்  அமைச்சர் ஈஸ்வரன், சட்டத் துறை அமைச்சர் சண்முகம் உள்ளிட் டோரை சந்தித்து, தமிழ்நாடு அரசின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங் களையும், தொழில் வாய்ப்புகளையும் விளக்கி, தொழில் முதலீடு செய்ய வலியுறுத்தினேன்.

அங்கிருந்து ஜப்பானின் ஒசாகா வுக்குச் சென்றேன். அங்கு டைசல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. முதலீட்டாளர் கருத்தரங்கில், தமிழ்நாட்டில் உள்கட் டமைப்புத் துறைகளில் முதலீடு செய் யுமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஒசாகாவில் கோமாட்சு தொழிற்சாலைக்குச் சென்று, ஒரகடத்தில் உள்ள அந் நிறுவன இயந்திர உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்தேன்.

ஒசாகாவிலிருந்து புல்லட் ரயில் பயணத்தில், இரண்டரை மணி நேரத் தில் 500 கிலோமீட்டரைக் கடந்து டோக்கியோ சென்றோம். ஜப்பானில் பொதுப் போக்குவரத்தில் ரயில் முக்கியப் பங்காற்றுகிறது.

இந்தியாவில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறையஉள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளதை ஒன்றிய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டோக்கியோவில் ஜெட்ரோ தலை வருடன் சந்திப்பு, 250 தொழில் நிறுவன தலைமை பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் உள்ளிட்டவற் றில் பங்கேற்று, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். பின்னர், ஜப் பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், டோக்கியோவில் உள்ள உலகின் 3-ஆவது உயரமான `ஸ்கைட்ரீ' கட்டடத்துக்குச் சென்றபோது, தமிழ் நாட்டை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற லட்சியம் மனதில் தோன்றியது. கடல் கடந்த பயணத்தால், தமிழ் நாட்டின் நிலை உயரும் என்ற நம் பிக்கை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சிபோல இல்லாமல், தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல் படுகிறது என்ற நம்பிக்கையை, முதலீட் டாளர்கள் மனதில்ஏற்படுத்தியுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, நாட்டின் முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம். -இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment