திருச்சி சிவா, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், இரா. முத்தரசன், சுப.வீ. பங்கேற்று வாழ்த்து!!
சென்னை,ஜூன் 28 - சென்னை தியாகராயர் நகர் பனகல் பூங்கா அருகில் அமைந்துள்ள தியாகராயர் அரங்கில் ‘90இல் 80 அவர்தான் வீரமணி’ தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நேற்று (27.6.2023) மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்றார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 வயதில் 80 ஆண்டு கால பொதுவாழ்வை எடுத்துக்காட்டுகின்ற வரலாற்று நிகழ்வாக இந்த சிறப்பு நிகழ்ச்சி திராவிடர் கழகத்தால் ஏற்பாடு செய்யப் பட்டு நடைபெற்றது. தலைமையுரை ஆற்றிய கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
தமிழர் தலைவருக்குப் பயனாடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், திருச்சி என்.சிவா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சிங்கப்பூர் இலியாஸ் ஆகி யோர் பயனாடை, பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள். கழகத்தின் சார்பில் துணைப் பொதுச் செய லாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
நூல் வெளியீட்டு விழா
"அகவை 90இல் 80 ஆண்டு பொது வாழ்வு" புத்தகத்தை திருச்சி என்.சிவா வெளியிட எழுச்சித்தமிழர் தொல்.திருமா வளவன், இரா.முத்தரசன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மூன்று புத்தகங்களின் நன் கொடை மதிப்பு ரூ.120. நிகழ்ச்சியில் ரூ.100க்கு வழங்கப்பட்டது.
புத்தகங்களைப் பெற்றுக் கொண்டவர்கள்
இரா.தமிழ்செல்வன், ஆ.வெங்கடேசன், வி.பன்னீர் செல்வம், தே.செ.கோபால், பொறியாளர் ச.இன்பக்கனி, கோ.ஒளிவண்ணன், ஆடிட்டர் இராமச்சந்திரன், வழக்குரைஞர்கள் ஆ.வீரமர்த்தினி, கோ.சா.பாஸ்கர், சே.மெ.மதிவதனி,சைதை மு.ந. மதியழகன், செ.பெ. தொண்டறம், பு, எல்லப்பன், தி.செ.கணேசன், இள வரசன், விழிகள் வேணு கோபால், வி.யாழ்ஒளி, ராமண்ணா, பெரியார்செல்வி, மு.கலை வாணன், பேராசிரியர் ப.தேவதாஸ், பெரம்பூர் பா.கோபால கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சிப்பொறுப்பாளர்கள் மற்றும் பலரும் புத்தகங்களை வரிசையில் சென்று பெற்றுக் கொண்டனர்.
தலைவர்கள் வாழ்த்துரை
திமுக கொள்கை பரப்புச் செயலாளரும்,மாநிலங்களவைக் குழுத் தலைவருமாகிய திருச்சி என்.சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் நன்றி பெருவிழாவாக இந்நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஏற்புரை
நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நெகிழ்ச்சியுடன் ஏற்புரை யாற்றினார். ஜாதி ஒழிப்புக்காகவும், சமூகநீதிக்காகவும் இயக்கம் கண்ட தந்தைபெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக கோயில் கருவறைகளில் ஜாதித் தீண்டாமை உள்ளதை அகற்ற வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தைக் கொண்டு வந்தார். திராவிட மாடல் ஆட்சியில் சமூக நீதிக் கான சரித்திர நாயகர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து சரித்திர சாதனை புரிந்துள்ளார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் தமதுரையில் குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவருமாகிய உ.பலராமன், பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன், புலவர் பா.வீரமணி, ஓய்வு பெற்ற நீதிபதி பரஞ்ஜோதி, வழக்குரைஞர் சு. குமாரதேவன், தமிழக மூதறிஞர்கள் குழுத் தலைவர் பேராசிரியர் ப.தேவ தாஸ், டி.கே.எஸ்.கலைவாணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment