கன்னியாகுமரி, ஜூன் 24- குமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 இடங்களையும், பா.ஜனதா 2 இடங்களையும் பெற்றன.
குமரி மாவட்ட திட்டக்குழுவுக்கு ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில்
7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதை யடுத்து வாக்குப்பதிவு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கிலும், லூயி பிரெய்லி கூட்டரங்கத்திலும் நேற்று (23.6.2023) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
அதன்படி வெற்றிபெற்றவர்கள் விவரம் ஊரக உள்ளாட்சி உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட ஊராட்சி 11ஆவது வார்டு கவுன்சிலர் நீல பெரு மாள் (7 வாக்குகள்), 10ஆவது வார்டு கவுன்சிலர் ஜான்சி லின் விஜிலா (7 வாக்குகள்), 3ஆவது வார்டு கவுன்சிலர் பரமேஸ்வரன் (6 வாக்குகள்), பா.ஜனதாவை சேர்ந்த 9ஆவது வார்டு கவுன்சிலர் சிவகுமார்(6வாக்குகள்), 5ஆவது வார்டு கவுன்சிலர் ராஜேஷ் பாபு (6 வாக்குகள்) ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நகர உள்ளாட்சி திட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தி.மு.க.வை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சி 7ஆவது வார்டு கவுன்சிலர் மேரி ஜெனட் விஜிலா (432 வாக்குகள்), உண்ணாமலைக்கடை பேரூராட்சி 11ஆவது வார்டு கவுன்சிலர் விஜிலா (422 வாக்குகள்), ஆற்றூர் பேரூராட்சி 13ஆவது வார்டு கவுன்சிலர் சிவன் (391 வாக்குகள்), மண்டைக்காடு பேரூராட்சி 3ஆவது வார்டு கவுன்சிலர் ராபர்ட் கிளாரன்ஸ் (390வாக்குகள்), காங்கிரசை சேர்ந்த அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி 13ஆவது வார்டு கவுன்சிலர் ஆதிலிங்க பெருமாள் (461 வாக்குகள்), உண்ணாமலைக் கடை பேரூராட்சி 15ஆவது வார்டு கவுன்சிலர் ஜான் தினேஷ் (417 வாக்குகள்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஸ்டாலின் தாஸ் (368 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றனர். முன்னதாக வாக்குப்பதிவை யொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரிகிரண் பிரசாத் தலைமையில் நாகர்கோவில் துணை காவல்துறை கண்காணிப்பாளர் நவீன்குமார் மேற்பார்வையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெற்றி பெற்ற திட்டக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான பாபு சான்றிதழ் வழங்கினார். இந்த தேர்த லுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று மாலை அய்ந்தே கால் மணிக்கு தொடங்கி இரவு பத்தே கால் மணிக்கு முடிவடைந்தது.
No comments:
Post a Comment