சென்னை, ஜூன் 9- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் இருக் கைகளின் எண்ணிக்கையை 51,046-லிருந்து ஜூன் 7 முதல் 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வச திக்காக தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந் துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற் றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கை களை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது.
இதன் மூலம் தினசரி சுமார் 60,000 பயணிகளில் 20,000 பயணி கள் வரை முன்பதிவு செய்து பய ணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வசதியினை அரசுப் பேருந் துகளில் 200 கி.மீ. தூரத்தில் பய ணிக்கும் பயணிகளுக்காக விரிவு படுத்தவும் முடிவு செய்யப்பட் டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரி வுப்படுத்தப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக் கைகள் வரை அதிகப்படுத்தி கூடு தல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது
இதனடிப்படையில் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நகரங் களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழ கத்தை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந் துகளிலும் முன்பதிவு செய்து பய ணிக்க இயலும். மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன் பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி 07.06.2023 அன்று முதல் நடை முறைப்படுத்தப்படவுள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment