முதலமைச்சர் தலைமையில் சிறப்போடு பீடுநடைபோடும் ‘திராவிட மாடல்' அரசு, சொன்னதைச் செய்யும் எடுத்துக்காட்டான அரசு என்பதற்கேற்ப 500 டாஸ்மாக் (மது விற்பனை) கடைகளை மூடும் ஆணை பிறப்பித்துள்ளது பெரிதும் பாராட்டி வரவேற்கத்தக்கது.
முழு மதுவிலக்கு 2026 ஆம் ஆண்டுக்குள் என்ற இலக்கு நோக்கி படிப்படியாக முன்னேற வேண்டுமென்பதும், அதன்மூலம் இளையதலைமுறை உள்பட அனைவரையும் பாதுகாக்க தி.மு.க. அரசு திருப்பத்தை ஏற்படுத்தியது என்ற நிலை உருவாகவேண்டும்.
கள்ளச்சாராய வேட்டை தொடர் பணியாக அமைதலும், அனைத்துக் கட்சியினரின் ஒத்துழைப்போடு மது ஒழிப்பு, குடிப் பழக்கத்திற்கு எதிரான தீவிரப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில் பல குழுக்கள் ஏற்படுத்தி, செயல்களுக்கு இணையாகப் பிரச்சாரமும் செய்வது மிகவும் அவசியமாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.6.2023
No comments:
Post a Comment