தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுமா: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுமா: அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

சென்னை, ஜூன் 6 - தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப் பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது. பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. 

ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று (5.6.2023) கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத் துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் பாது காப்புக்காக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என் றும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment