கடல்சார் பல்கலை.யில் 5 புதிய பட்டப்படிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

கடல்சார் பல்கலை.யில் 5 புதிய பட்டப்படிப்புகள்

சென்னை, ஜூன் 4 - இந்திய கடல்சார் பல்கலைக்கழ கத்தின் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி கே.டி. ஜோஷி, நிதி அதிகாரி எம்.சரவணன் ஆகியோர் சென்னையில் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

கடல்சார் தொழில் துறையின் தேவையை கருத்தில்கொண்டு இந் திய கடல்சார் பல்கலைக் கழகம் எம்டெக் (மரைன் டெக்னாலஜி, எம்பிஏ (பன்னாட்டு போக்குவ ரத்து மற்றும் தளவாட மேலாண்மை) ஆகிய முதுநிலை படிப்புகளை யும், பிஎஸ்சி (கடல்சார் அறிவியல்), பிபிஏ (தள வாடங்கள் சில்லறை வணிகம் மற்றும் மின்-வணிகம்), பிபிஏ (கடல் சார் தொழில்பயிற்சி) ஆகிய 3 இளநிலை படிப் புகளையும் இந்த ஆண்டு அறிமுகப் படுத்தியுள்ளது.

இப்பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கடல்சார்துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக் கும் வகையில் அமைந்துள் ளன. இப்பல்கலைக்கழகத் தில் மாணவிகளின் எண் ணிக்கை 2014இல் 13 ஆக இருந்தது. தற்போது அது 123 ஆக உயர்ந்து உள்ளது. ஆண்டுதோறும் 50 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் அண்மையில் பிடபிள்யு குளோபல் யுனைடெட் எல்பிஜி என்ற நிறுவனத்துடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்யப் பட்டது.

பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பை மேம் படுத்த ஒன்றிய அரசு 2022-2026 காலகட்டத் துக்கு ரூ.200 கோடி வழங்கி யுள்ளது. இதில் புதுமை ஆய்வகம், சிமுலேட்டர் மற்றும் நவீன ஆய்வ கங்கள் அமைக்கப்படும். என்றனர்.

No comments:

Post a Comment