சாமியார் ஆளும் உ.பி.யில் அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 68 நோயாளிகள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 20, 2023

சாமியார் ஆளும் உ.பி.யில் அரசு மருத்துவமனையில் 5 நாட்களில் 68 நோயாளிகள் பலி

பல்லியா, ஜூன் 20 - உத்தரப்பிர தேசத்தின் பல்லியா நக ரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையில் கடந்த 15ஆம் தேதி முதல் 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் நேற்று முன்தினம் (18.6.2023) வரை 4 நாளில் 57 நோயா ளிகள் அடுத்தடுத்து உயி ரிழந்தனர். இவர்கள் அனைவரும் 60 வயதை கடந்தவர்கள் ஆவர்.

மாநிலத்தில் நீடித்து வரும் வெப்ப அலை காரணமாக இந்த உயிரி ழப்புகள் நிகழந்திருப்ப தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த விவகாரத்தில் மருத்துவமனையின் தலைமை மருத்துவ சூப் பிரண்டு டாக்டர் திவா கர் சிங், அசம்காருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனை யில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத் தில் 178 நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இதிலும் 11 நோயாளிகள் பலியாகி னர். இதன் மூலம் 5 நாட் களில் 68 நோயாளிகள் இந்த மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

இந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக சிறப்பு கமிட்டி ஒன்றை மாநில சுகாதாரத்துறை மருத் துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கு விசாரணை நடத்திய இந்த குழுவினர் மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் ஆய்வு செய்தனர்.

பலியானவர்கள் அனைவரும் முதியோர் என்பதால் இது தற்செயல் நிகழ்வுதான் என இந்த கமிட்டி கூறியுள்ளது. எனினும் இந்த சம்பவத் தின் பின்னணியில் பொதுவான காரணம் எதுவும் உள்ளதா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என் றும் கமிட்டி உறுப்பினர் கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment