மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் இந்தியா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் இந்தியா

லண்டன், ஜூன் 7- உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நேபாளம் உலகிலேயே மிகவும் மாச டைந்த நாடுகள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது.

தெற்காசியாவில் வசிப்பவர்கள் சரா சரியாக ஒரு கன மீட்டருக்கு 99.73 மைக்ரோ கிராம் நுண்துகள்களை சுவாசிப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது வழக்கமான அளவை விட 20 மடங்கு அதிகம் என்பது குறிப் பிடத்தக்கது.

துகள்கள், தூசி, எரிபொருட்கள், வாகனப் புகை, தொழிற்சாலை கழிவு களால் மாசு அதிகரித்து வருவதாகவும், இதில் துகள்கள் மிகவும் நுண்ணிய அளவில் இருப்பதால் கடுமையான இதயநோய் மற்றும் சுவாச நோய்களால் மரணம் ஏற்படுத்தும் அபாயம் அதி கரித்து வருவதாகவும் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந் துள்ளது.

No comments:

Post a Comment