சென்னை, ஜூன் 10 - ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் முழு உடல் பரிசோதனை மய்யம் 5 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து உள்ளது. இதுவரை 48,900 பேர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் முழு உடல் பரிசோதனை மய்யம் கடந்த 2018 ஜூன் 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என 4 வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ரத்தப் பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல், இசிஜி, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்த சர்க் கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம், கண் பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு மற்றும் இதய செயல்பாட்டைக் கண்டிறியும் ‘டிரெட்மில்’ பரிசோதனைகள் என 100-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நாட்டிலேயே வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத வகையில் அதி நவீன கட்டமைப்புடன் இந்தப் பரிசோதனை மய்யம் அமைந்திருப்பதால் அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இதுவரை 18,000 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டிரெட் மில் பரிசோதனைகள் என மொத்தம் 48 ஆயிரத் துக்கும் அதிகமானோருக்கு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்கள் கர்ப்பிணிகளுக்காக பிரத்யேகமாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ரூ.1,000 மற்றும் ரூ.2,000 ஆகிய இரு வகையான பரி சோதனைகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இதுவரை 400-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் இந்தப் பரிசோதனை களை மேற்கொண்டு பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குநர் விமலா, நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோர் கூறியதா வது: ஓமந்தூரார் மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மய்யத்துக்கு தொடக்கத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக் களுக்கும் இங்கு தரமான மருத்துவ சேவைகள் வழங்கப் படுதே அதற்கு காரணம். தனியார் மருத்துவமனைகளில் கூட இல்லாத சில உயர் மருத்துவ உபகரணங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது அதற்கு அடுத்தகட்டமாக கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அறிவதற்கான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உபகரணம் மற்றும் மரபணு பரிசோதனைக்கான அனலைசர் பகுப்பாய்வு சாதனம் ஆகியவை ரூ.1.50 கோடி செலவில் பிரத்யேகமாக கொள்முதல் செய்யப் பட்டு அதுவும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment