ஜூன் 4இல் பெரியாரியல் பயிற்சி வகுப்பு, வைக்கம் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

ஜூன் 4இல் பெரியாரியல் பயிற்சி வகுப்பு, வைக்கம் நூற்றாண்டு விழா

மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்த திண்டுக்கல் கலந்துரையாடலில் தீர்மானம்

திண்டுக்கல், ஜூன் 3- திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.5.2023 அன்று காலை 11 மணிக்கு கொடகனாறு இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் தலைமை ஏற் றார். தொழிலாளர் அணி மாநில செய லாளர் மு.சேகர் கருத்துரை வழங்கி னார். 

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பினர் மயிலை. ந. கிருஷ் ணன் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் அவர்களுக்கும் மற்றும் தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகர் அவர்களுக்கும் பயனாடை அணிவித்து உரையாற்றினார். 

மேலும்  மாவட்ட செயலாளர் வழக் குரைஞர் ஆனந்த முனிராசன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் நா.கமல்குமார்,  மாவட்ட அமைப்பாளர் பழ. இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மு.நாகராஜன், மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர். காஞ்சித்துரை, நகர தலைவர் அ. மாணிக்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.பாண்டி,  நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், தி.தொ.க. பேரவை தலைவர் அ.மோகன், தி.தொ.க. பேரவை துணைத் தலைவர் தி.க. செல்வம், முத்து, குழந்தை வேலு, நாகேந்திரன், பழனிச்சாமி, சிதம்பரம்,  செபாஸ்டியன் சின்னப்பர், பொன்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, தீர்மானங் கள் குறித்தும், அடுத்தகட்ட செயல்பாடு கள் குறித்தும் உரையாற்றினர். 

மாவட்ட கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

இரங்கல் தீர்மானம்

சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் குழந்தை வேல் அவர்களின் தாயார் பிறவியம்மாள் மறைவுற்றார். அவருக்கு இந்த கூட்டம் தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

1. மே 13 ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி செயல் படுவோம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

2. ஜூன் 4: பெரியாரியல் பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவர்களை யும், இளைஞர்களையும் கலந்து கொள்ள செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது

3. வைக்கம் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட் டம் ஒன்றியம் வாரியாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

4.திண்டுக்கல் கழக மாவட்டத்திற் குட்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தொடர் கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரங்கள் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள் ளது. முதல் கட்டமாக  சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பள் ளப்பட்டி, கம்பிளியம்பட்டி, அதிகாரி பட்டி, வி.எஸ்.கோட்டை, நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி ஆகிய இடங்களில் கூட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment