3.6.2023 சனிக்கிழமை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 2, 2023

3.6.2023 சனிக்கிழமை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சைதாப்பேட்டை: மாலை  5.30 மணி * இடம்: 

மு.ந. மதியழகன் இல்லம், கோடம்பாக்கம் சாலை, சைதாப் பேட்டை, சென்னை * தலைமை: இரா. வில்வநாதன் (தலைவர், தென் சென்னை மாவட்ட ) * கருத்துரை: தலைமை கழக அமைப்பாளர்) தே.செ. கோபால் * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், சென்னை மற்றும் சுற்றியுள்ள 6 மாவட்டங் களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களை நடைமுறைப்படுத்துதல்.... * திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம் பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.  * இவண்: செ.ர. பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்)

கன்னியாகுமரி மாவட்ட சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி: காலை 9.30. மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில். * தலைமை:  

மா.மு. சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு அதனைத் தொடர்ந்து சொற்பொழிவு கள் நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்க குமரி மாவட்ட திராவிடர்கழகம், கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்  * இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment