கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கருநாடகாவில் 10 கிலோ இலவச அரிசித் திட்டத் திற்கு மோடி அரசு தடை ஏற்படுத்தினாலும், அத்திட்டத்தை நிறை வேற்றுவோம் என முதலமைச்சர் சித்தராமையா உறுதி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* சமூக நீதி காவலர் வி.பி.சிங் சிலையை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
தி இந்து:
* அரசியல் ரீதியாக தெற்கை வடக்கிலிருந்து வேறுபடுத்துவது அதன் எதிர் கலாச்சாரங்கள் பல்வேறு ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு இயக்கங்கள், அதன் உயர் பொருளாதார நிலை மற்றும் கல்வி, நவீன நிறுவனங்கள், தொழில்துறை உள்கட்ட மைப்பு போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கட்டமைக்கப்பட்டது என அறிஞர்கள் வாதிட்டுள்ளதை அய்தராபாத் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் என் மனோகர் ரெட்டி தனது கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.
* மணிப்பூர் பற்றி எரியும் போது, பிரதமர் மவுனம் காக்கிறார். உள்துறை அமைச்சர் 'செயல் திறன் அற்றவரா கவும், முதலமைச்சர் பைரன் சிங் செயல்படாத முதலமைச் சராகவும் உள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.
தி டெலிகிராப்:
* ராஷ்டிரிய ரைபிள்ஸ் ராணுவ மேஜர், புல்வாமா மசூதிக்குள் நுழைந்து 'ஜெய் சிறீராம்' என்று முழக்கமிடும் படி வழிபாட்டாளர்களைக் கட்டாயப்படுத்தியதாக மேனாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment