கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 5) மாலை கடலூர் பகுதியில் திடீர் சூறைக்காற்று வீசியது. இதில் ராமாபுரம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம், வழி சோதனைபாளையம் எம். புதூர், வெள்ளக்கரை, கொடுக் கன்பாளையம், குமளங்குளம், புலியூர், சத்திரம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங் களில் 1000 ஏக்கருக்கும் கூடுத லான பரப்பில் பயிரிடப்பட் டிருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல் வேறு வகையான வாழை மரங் கள் சாய்ந்து முறிந்து விழுந்தன. இவைகள் அனைத்தும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி செய்யப்பட் டவையாகும்.
இது குறித்து ராமபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் வாழை பயிரி டப்பட்டு வருகின்றோம். கடந்த ஜூலை மாதம் வாழை பயிரி டப்பட்டு தற்போது மரமாக வளர்ந்து ஒவ்வொரு மரத்தி லும் வாழைத்தார்கள் குலை தள்ளி உள்ளது. இந்த வாழை மரங்களை சுமார் 10 மாதம் வெயில், கடும் மழை என பாரா மல் பாதுகாத்து வந்தோம்.
வருகின்ற ஜூலை மாதம் அறுவடை செய்ய இருந்தோம். லட்சக்கணத்தில் செலவுசெய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறி யாக்கி உள்ளது .
வாழை மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்து வீணாகி குப்பை யில் கொட்டக்கூடிய நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வா கம் பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அளவீடு செய்து உரிய முறையில் இழப்பிட்டுத் தொகை வழங்க வேண்டும்" என்று வேதனை யுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (ஜூன் 6) தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் ஆகியோர் தனித்தனி இருசக்கர வாகனத்தில் ஒதியடி குப்பம், வெள்ளக்கைரை, கீரப் பாளையம் உள்ளிட்ட பல் வேறு கிராங்களில் பாதிக்கப் பட்ட வாழைத் தோப்புகளை பார்வையிட்டனர்.
எஸ்பி. ராஜாராம், தோட் டக்கலைத்துறை துணை இயக் குனர்(பொறுப்பு) அருண் மற் றும் வருவாய், தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனி ருந்தனர்.
பின்னர் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழைகள் சேதமடைந்து உள்ளன. இத னால் 1,109 விவசாயிகள் பாதிக் கப்பட்டு உள்ளனர்.
சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலை துறை அதிகா ரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பாதிப்பு விவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றார்.
No comments:
Post a Comment