ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதவி விலகாவிட்டால் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 7, 2023

ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதவி விலகாவிட்டால் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, ஜூன் 7- ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழ கிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று  (6.6.2023)செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பின்போது வைணவ ஆதீனங் கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர் கள், பவுத்தர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்பட வில்லை. ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச் சர் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தமிழ் நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மன்னர் ஆட்சி முடிந்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அது ஏற்புடையதல்ல. செங்கோல் அரசியல், கருநாடக மாநில தேர் தல்போல பாஜகவுக்கு தோல்வி யைத் தான் தரும். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

முன்னதாக மேனாள் அய்ஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

மணிப்பூர் மாநிலத்தில் நடை பெறும் கலவரத்துக்கு பா.ஜ.க.வின் மதவாத அரசியலே காரணம். அங்கு இன அழிப்பு நடைபெறு கிறது.

இணையதளம், தொலை பேசி வசதிஇல்லை. 40 ஆயிரம் பேர் காட்டுக்குள் சென்று விட்ட னர். மணிப்பூர் மக்களுக்கு காவல் துறையினர், ராணுவம் என யார் மீதும் நம்பிக்கை இல்லை. நவீன உலகில் எங்கும் நடக்காத கொடுமை அங்கு நடக்கிறது.

ஒன்றிய அரசுக்கு 3 கேள்விகள்:

மணிப்பூரில் 292 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை முகாம்களை அரசு நடத்துகிறது? கிராமங்களில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. அங்கு வசித்தவர்கள் தொடர் பானஆவணங்கள் உள்ளனவா? மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை காவல் துறையினர் கவனிக்கிறார் களா அல்லது ராணுவம் கவனிக் கிறதா?

இந்த 3 கேள்விகளுக்கு ஒன் றியஅரசு பதில் அளிக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரத் தில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. 

அங்கு நடைபெறும் கலவ ரத்தை அரசு கண்டு கொள்ள வில்லை. இது மக்களுக்கான அரசி யல் அல்ல. மக்களிடம் விரோ தத்தை வளர்க்கும் அரசியல். இவ் வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment