இராமநாதபுரம், ஜூன் 23 - ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகை, மாவட்டங்களில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அனுமதி பெற்று 21.6.2023 அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்
நள்ளிரவு கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மண்டபத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு, புதுக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு விசைப்படகு, நாகையைச் சேர்ந்த ஒரு விசைப்படகு என மொத்தம் நான்கு விசைப்படகுகளில் இருந்த 22 மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்களை நெடுந்தீவு துறைமுகம் கொண்டு சென்று இலங்கை படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீன்பிடித் தடைக் காலம் கடைப்பிடிக்கப்பட்டு, அதன்பின் மீன்பிடிக்க கடலுக்கு மீண்டும் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கைக் கடற்படையினர் தற் பொழுது தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரைக் கைது செய் துள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் பாராமுகத்தால் மீன வர் துயர் தீரும் நாள் எந்நாளோ? என மீனவர் குடும்பத் தினர் துயரக்கடலில் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
No comments:
Post a Comment