இது தொடர்பாக அக்கட்சி யின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பாஜக ஒன்றிய அரசு, அடர்த் தியான மின் பயன்பாட்டு நேரத் தில் மின் நுகர்வோர் உபயோகிக்கும் மின் சாரத்துக்கு, வழக்கமாக உள்ள கட்டணத்துடன் மேலும் 20 சதவீதம் கூடுதல் கட்ட ணம் விதித்துள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை மின்சார உபயோகத்தை சராசரி கணக்கிட்டு வைப்பு நிதி என்ற பெயரில் பெரும் தொகை வசூலிக்கப் படுகிறது.
இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கபட்டுள்ள பெரும் அநீதி யாகும். அண்மையில் தான் மின் சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை பெற்று, கட்டண உயர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஒன்றிய அரசு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன் படுத்தப்படும் மின்சாரத்துக்கு கூடு தல் கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளையை விட கொடியது.
இந்த மக்கள் விரோத மின் கட்டண உயர்வுக்கு இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள் கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment