புதுடில்லி, ஜூன் 26 - 2025 டிசம்பருக்குள் 2,026 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கு டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் 100 மின்சார பேருந்துகள் இந்த ஆண்டு செப்டம் பரில் போக்குவரத்துத் துறையில் இணைக்கப்படும் என்று என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மின்சார பேருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஎம்அய் எலக்ட்ரோ, டில்லி போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து துறைக்கு ஒன்பது மீட்டர் நீளமுள்ள 728 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கு ஒப்பந்தமிட்டுள்ளது. இது தவிர, 12 மீட்டர் நீளமுள்ள 570 மின்சார பேருந்துகள் போக்குவரத்துத் துறைக்கு வழங்கவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இந்த 2026 இ-பஸ்கள் அடுத்த 12 ஆண்டுகளுக்கு டில்லியில் 14.50 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிஎம்அய் எலக்ட்ரோவின் தலைவர் சதீஷ் ஜெயின், டில்லி அரசாங்கத்திற்கு பேருந்துகளின் வழக்கமான பராமரிப்புக்கு நிறுவனம் உதவும் என்று கூறினார். டிஎம்ஆர்சி உத்தரவின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட பிஎம்அய்யின் 100 பேருந்துகள் தற்போது டில்லியில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மின்சார பேருந்துகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பான செயல்திறன், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்கிறது என்றும், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் போன்றவை இப்பேருந்துகளில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், 2025ஆம் ஆண்டுக்குள் டில்லியின் சாலைகளில் 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 80 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் என்றும் பலமுறை கூறியுள்ளார்.
No comments:
Post a Comment