தினசரி கரோனா பாதிப்பு 202 ஆக சரிவு - தொற்றால் 2 பேர் சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

தினசரி கரோனா பாதிப்பு 202 ஆக சரிவு - தொற்றால் 2 பேர் சாவு

புதுடில்லி, ஜூன்.5 -  நாடு தழுவிய அளவில் தினசரி  கரோனா  பாதிப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று முன்தினம்  (3.6.2023) 237பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று (4.6.2023)  இந்த எண்ணிக்கை மேலும் சரிந்து 202 ஆனது. இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 582 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தொற்று பாதிப்பில்இருந்து நேற்று ஒரு நாளில் 359 பேர் மீண்டனர். இதுவரையில் மொத்தம் 4 கோடியே 44 லட் சத்து 56 ஆயிரத்து 359 பேர் மீண்டுள்ளனர்.

 சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 4 பேர் பலியாகினர். நேற்று மேற்கு வங்காளத்திலும், மேகாலயாவிலும் தலா ஒருவர் இறந்துள்ளனர். தொற்றால் நாட்டில் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட் சத்து 31 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண் ணிக்கையில் நேற்று 159 குறைந் தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,343 ஆக குறைந்துள்ளது.


No comments:

Post a Comment