2011 - தேர்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 3, 2023

2011 - தேர்தல்

தி.மு.க. ஆட்சி அமையும் போதெல்லாம் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றும் நல்லாட்சியைத்தான், முதலமைச்சராக இருந்த கலைஞர் செய்து வெற்றி கண்டார். 2006 முதல் 2011 வரை கலைஞரது பொற்கால ஆட்சியில் பலப் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களுக்கான மகத்துவத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டன.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி

மாதந்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய். துவரம் பருப்பு. உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு

மானியவிலையில் மளிகைப் பொருட்கள்

7000 கோடி ரூபாய் விவசாயக் கூட்டுறவுக் கடன் ரத்து

வீடுகள் தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்

இலவச எரிவாயு அடுப்புகள்

மீண்டும் 117 உழவர் சந்தைகள்

காவிரி-குண்டாறு மற்றும் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத்திட்டம்

சத்துணவுடன் வாரம் 5 நாள் முட்டைகள், வாழைப் பழங்கள், மாணவர்கட்கு இலவச பஸ் பாஸ்

தொழிற்கல்விப் படிப்புக்களுக்கு நுழைவுத் தேர்வு ரத்து

10-ஆம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடம்-தமிழில் படித்தவர்கட்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத்திட்டம்

கல்வி, வேலைவாய்ப்பில் இசுலாமியர்க்கு 3.5 விழுக்காடு, அருந்ததியினர்க்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம்

புதிதாக 95 சமத்துவபுரங்கள்

சென்னை கோட்டூர்புரத்தில் 

ரூ. 171 கோடி மதிப்பீட்டில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்

புதிய சட்டமன்ற-தலைமைச் செயலகம்

வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

தென்சென்னை நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம்

இராமநாதபுரம்-பரமக்குடி, மற்றும் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்திட்டம்

அரசு ஊழியர்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் ரத்து

கோவையில் முதன்முதலாக உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது

இவ்வாறான முறையில் விவசாயிகள், நெசவாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர்க்கு பல்வேறு தரப்பினருக்கும் பல சரித்திரம் பேசும் சாதனைகளை உருவாக்கியவர்தாம் கலைஞர். இந்தச் சூழ்நிலையில்தான் 2011-மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தலைக் கண்டது கழகம். கலைஞர் திருவாரூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.


No comments:

Post a Comment